பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (1 ஜூன் 2020 திங்கட்கிழமை) நடைபெற்றது. மத்திய அரசு பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்த பின்னர் நடைபெறும் முதலாவது மத்திய அமைச்சரவைக் கூட்டமாகும் இது.
இந்தியாவில் கடும் உழைப்பாளிகளான விவசாயிகள், குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனப்பிரிவினர் மற்றும் தெருவோர வியாபாரிகளின் வாழ்க்கையை மாற்றியமைக்கக் கூடிய வகையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிக்கரம்: MSME என்றழைக்கப்படும் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், அமைதியாக செயலாற்றும் ஆறு கோடிக்கும் மேற்பட்ட MSMEகள் வலுவான தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கு மிக முக்கிய பங்காற்றி வருகின்றன.
கோவிட்-19 பெருந்தொற்றையடுத்து, நாட்டைக் கட்டமைப்பதில் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களின் பங்கை விரைவாக நன்கு உணர்ந்து கொண்டவர் பிரதமர் திரு நரேந்திர மோடி. அதனால் தான் ஆத்மா நிர்பார் பாரத் அபியான் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகளில் MSMEக்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தன. இந்தப் பொருளாதாரத் தொகுப்பின் கீழ் MSME பிரிவுக்கு கணிசமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் பிரிவுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டது. முக்கியமான பல திட்டங்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டபடி பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருகின்றன.
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இதர அறிவிப்புகளை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தையும் மத்திய அரசு இன்று முன்வைத்துள்ளது.
குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான வரையறைகளைத் திருத்தியமைத்தல்: எளிய முறையில் வர்த்தகம் செய்வதற்கான வழிமுறைகளில் இதுவும் ஒன்று. இதன் மூலம் MSME பிரிவில் முதலீட்டை ஈர்க்க முடியும். வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.
நலிவுற்ற குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு மூலதன ஆதரவு அளிப்பதற்காக, பிணையில்லா துணைக் கடன் வழங்குவதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானத்துக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நலிவுற்ற இரண்டு லட்சம் குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் இதன் மூலம் பயனடையும். நிதியத்திற்கான நிதிக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளிப்பதற்கான தீர்மானத்துக்கும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. கடன் மூலதன விகிதத்தை நிர்வகிக்கவும், திறன் மேம்பாட்டுக்கு வகை செய்யவும் MSME நிறுவனங்களுக்கு இது உதவும். இதனால் பங்குச் சந்தைகளில் தங்களது பங்குகளைப் பட்டியலிடவும் MSME நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
குறு, சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் பற்றிய வரையறை மேல்நோக்கித் திருத்தம்: MSME வரையறையை மேலும் மேல் நோக்கி உயர்த்தி வரையறுக்க மத்திய அரசு இன்று முடிவெடுத்தது. உற்பத்தி மற்றும் சேவை அமைப்புகளுக்கான குறு நிறுவனங்கள் ஒரு கோடி ரூபாய் முதலீடு அல்லது 5 கோடி ரூபாய் வர்த்தகம் என்றும்; சிறு நிறுவனங்களுக்கான அளவு 10 கோடி ரூபாய் முதலீடு 50 கோடி ரூபாய் வர்த்தகம் என்றும்; நடுத்தர நிறுவனத்துக்கான அளவு 20 கோடி ரூபாய் முதலீடு 100 கோடி ரூபாய் வர்த்தகம் என்றும் திருத்தியமைக்கப்பட்டு அறிவிக்கப்ப்ட்டிருந்தது. 2006ஆம் ஆண்டு MSME மேம்பாட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தான் இந்த வரையறை திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 13 மே 2020 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு, சந்தை மற்றும் விலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது சந்தை விலைச் சூழலுக்கு ஏற்றதாக இல்லை என்றும், இதை மேலும் திருத்தியமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன. இந்தக் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு பிரதமர், இந்த வரையறைக்கான அளவுகளை உற்பத்தி மற்றும் சேவைத்துறைக்கு – நடுத்தர நிறுவனங்களுக்கு, மாற்றியமைக்க முடிவெடுத்துள்ளார். தற்போது இது 50 கோடி ரூபாய் முதலீடு; 250 கோடி ரூபாய் வர்த்தகம் என்ற அளவிலாக இது திருத்தியமைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி தொடர்பான வர்த்தகம், இந்த அளவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் எதுவாயினும் அதற்கு இது பொருந்தும்.
கடின உழைப்பாளிகளான நமது தெருவோர வியாபாரிகளுக்கு ஆதரவு: மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், பிரதமரின் தெருவோர வியாபாரிகள் ஆத்ம நிர்பார் நிதித் திட்டத்தின் கீழ், பிரதமர் ஸ்வநிதி என்ற சிறப்பு நுண்கடன் வசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு கடன்கள் வழங்கப்படும். அவர்கள் மீண்டும் தங்கள் பணிகளைத் தொடங்கி, தங்கள் வாழ்வாதாரத்திற்கான பொருளீட்ட அவர்களுக்கு இத்திட்டம் உதவும். வியாபாரிகள், தள்ளுவண்டிக்காரர்கள், கூடைகளில் சுமந்து சென்று விற்பவர்கள், தெருவோர வியாபாரிகள் எனப் பல்வேறு துறைகளையும் சேர்ந்த 50 லட்சம் பேர் இத்திட்டத்தினால் பயனடைவார்கள்.
காய்கறிகள், பழங்கள், தெருவில் விற்கும் உணவுப் பண்டங்கள், தேனீர், பக்கோடா, முட்டை, துணிமணி, ஆடைகள், காலணிகள், கைவினைப்பொருள்கள், புத்தகங்கள், எழுதுபொருள்கள் போன்ற பல்வேறு பொருள்கள் அவர்களால் விற்கப்படுகின்றன, முடிதிருத்துநர்கள், செருப்பு தைப்பவர்கள், பான் விற்பவர்கள், துணிகளை சலவை செய்து தருபவர்கள் போன்ற பல்வேறு சேவைகளையும் அவர்கள் செய்கின்றனர்.
அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து அரசு உணர்ந்துள்ளது. அவர்களது வியாபாரம் நல்ல முறையில் நடப்பதை உறுதி செய்வதற்காக, அவர்களுக்கு, கடன் வசதி வழங்குவது அவசியம் தேவையாகும்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முக்கியமான பங்கு வகிக்கும். பல்வேறு காரணங்களுக்காக இத்திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்த திட்டமாகும்.
1- வரலாற்றில் முதல் முறையாக:
நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் ஒன்றின் பயனாளிகளாக புறநகர்/கிராமப்புறத் தெருவோர வியாபாரிகள் ஆவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.
பணி மூலதனக் கடனாக வியாபாரிகள் ரூ 10,000 வரை பெற்றுக்கொண்டு, அதை ஒரு வருடத்தில் மாதத் தவணைகளாகச் செலுத்தலாம். கடனை முறையாக அல்லது விரைவாக செலுத்தும் பட்சத்தில், வருடத்துக்கு 7 சதவீதம் கடன் மானியமாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை நேரடிப் பயன் பரிவர்த்தனை முறையில் செலுத்தப்படும். கடனை முன்னதாகவே செலுத்தும் பட்சத்தில் அதற்கான அபராதம் இருக்காது.
சிறு கடன் நிறுவனங்கள்/வங்கி சாரா நிதி நிறுவனங்கள்/சுய உதவிக் குழு வங்கிகள் ஆகியவை, அவற்றின் கள அளவிலான இருப்பின் காரணமாகவும், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட நகர்ப்புற ஏழைகளுடனான அறிமுகம் காரணமாகவும், முதல் முறையாக நகர்ப்புற ஏழைகளுக்கான திட்டம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
2- அதிகாரமளித்தலுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்:
திறன்வாய்ந்த விநியோகத்தையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அரசின் நோக்கத்தின் ஒரு பகுதியாக, இந்தத் திட்டத்தை முழுமையான தீர்வுகளுடன் நிர்வகிக்க இணையதளம்/செயலி ஆகியவற்றைக் கொண்ட ஒரு டிஜிட்டல் தளம் உருவாக்கப்படுகிறது. வணிகர்களை முறையான நிதி அமைப்புக்குள் ஒருங்கிணைக்கவும் இந்த தளம் உதவும். கடன் மேலாண்மைக்காக இந்திய சிறுதொழில்கள் வளர்ச்சி வங்கியின் (சிட்பி) உதயமித்ரா இணையதளத்துடனும், வட்டி மானியத்தை நிர்வகிக்க வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் பைசா இணையதளத்துடனும் இணையதளம் மற்றும் செயலியை இந்தத் தளம் இணைக்கும்.
3- டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல்:
மாதந்தோறும் பணத்தை திரும்பி வழங்குவதன் மூலம் தெருவோர வியாபாரிகளின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை இந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது.
4. திறன் கட்டமைத்தல் மீது கவனம் செலுத்துதல்:
மாநில அரசுகள், தீன்தயாள் ஏழைகள் மேம்பாட்டுத் திட்டம்–தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், இந்திய சிறுதொழில்கள் வளர்ச்சி வங்கி, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE), இந்திய தேசிய பரிவர்த்தனை நிறுவனம் (NPCI) மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனங்களின் மாநில அமைப்புகளுடன் இணைந்து, அனைத்துப் பங்குதாரர்களுக்கும் திறன் கட்டமைப்பு மற்றும் நிதிக் கல்வியறிவுத் திட்டத்தை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தொடங்கும். நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் தகவல், கல்வி, தகவல் தொடர்பு நடவடிக்கைகள் நடத்தப்பட்டு, ஜீலை மாதத்தில் இருந்து கடன் வழங்குதல் தொடங்கும்.
ஜெய் கிசான் (விவசாயிகள் வாழ்க) உணர்வைத் தூண்டுதல்:
2020-21 கரிப் பருவத்தில், அரசு தனது வாக்குறுதியான குறைந்தபட்ச ஆதரவு விலையை உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிப்பதை நிறைவேற்றியது. வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், 14 பயிர்களுக்கான 2020-21 கரிப் பருவ குறைந்தபட்ச ஆதரவு விலை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 14 பயிர்களுக்கான அசல் விலை மீதான வருவாய் 50 சதவீதத்தில் இருந்து 83 சதவீதம் வரை ஆகும்.
வேளாண் மற்றும் அதை சார்ந்த நடவடிக்கைகளுக்காக வங்கிகள் அளித்த ரூ 3 லட்சம் வரையிலான அனைத்து குறுகிய காலக் கடன்களின் திரும்பச் செலுத்துதல் தேதியை 31.082020 வரை நீட்டிக்கவும் இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. கடன் தள்ளுபடியும், சரியாக செலுத்தியதற்கான ஊக்கத்தொகை ஆகிய பலன்களும் விவசாயிகளுக்குக் கிடைக்கும்.
1 மார்ச் 2020 முதல் 31 ஆகஸ்ட் 2020 வரையிலான வேளாண் குறுகிய காலக்கடன் பாக்கிக்கு, வங்கிக்கு 2 சதவீதம் கடன் தள்ளுபடியும், சரியாக செலுத்தியதற்காக விவசாயிகளுக்கு 3 சதவீதம் ஊக்கத்தொகையும் தொடர்ந்து அளிக்கப்படும்.
இத்தகைய கடன்களை வங்கிகள் மூலம் வருடத்துக்கு 7 சதவீதம் வட்டிக்கு, வங்கிக்கு 2 சதவீதம் கடன் தள்ளுபடியுடனும், சரியாக செலுத்தியதற்காக விவசாயிகளுக்கு 3 சதவீதம் ஊக்கத்தொகையுடனும் அளிக்கும் இந்திய அரசின் முடிவு, ரூ 3 லட்சம் வரையிலான கடன்களை 4 சதவீத வருட வட்டிக்கு அளிக்கும்.
விவசாயக் கடன் அட்டைகளின் மூலம் வாங்கப்பட்ட கடன்கள் உட்படக் குறுகிய காலக் கடன்களை சலுகையுடன் விவசாயிகளுக்கு வழங்க வட்டித் தள்ளுபடித் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த சில வாரங்களில் பல விவசாயிகளால் தங்களின் சிறு கடன் தவணைகளைச் செலுத்த வங்கிக் கிளைகளுக்கு செல்ல முடியவில்லை. எனவே, அமைச்சரவையின் முடிவு கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு உதவும்.
ஏழைகள் மீதான அக்கறையே அரசின் முன்னுரிமை
பிரதமர் தலைமையிலான அரசின் முன்னுரிமைகளில் முதலிடம் பெற்றிருப்பவர்கள் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள். கொரோனாவைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து, ஏழைகளிலும் ஏழைகளாக இருப்பவர்களின் தேவைகள் மீது அரசு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. பொது முடக்கம் ஆரம்பித்த இரண்டு நாட்களிலேயே, 26 மார்ச் 2020 அன்று அறிவிக்கப்பட்ட பிரதமர் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத் தொகுப்பில் இதைக் காணலாம்
80 கோடி மக்களுக்கு உணவு உறுதி செய்வது, 20 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணம் பட்டுவாடா செய்வது, மூத்தக் குடிமக்கள், ஏழை விதவைகள் மற்றும் ஏழை மாற்றுத் திறனாளிகளின் கைகளில் பணத்தை வழங்குவது, பிரதமரின் விவசாயிகள் திட்டத்தின் பயனாளிகளுக்குத் தவணையை முன்கூட்டியே அளிப்பது போன்ற நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. இந்த உடனடி நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்காவிட்டால் பொது முடக்கத்தின் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவர்களை பெருமளவில் இது சென்றடைந்தது. மேலும், இது வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இருக்கவில்லை. சில நாட்களிலேயே, பணமாகவோ அல்லது பொருளாகவோ கோடிக்கணக்கான மக்களை உதவிகள் நேரடியாக சென்றடைந்தன.
சுய–சார்பு இந்தியாத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி, ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் இலவச உணவு தானியங்கள், அவர்களின் தங்கும் வசதிக்காக கட்டுப்படியாகக் கூடிய வகையில் புதிய வாடகைத் திட்டம் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.
விவசாயிகளைக் கட்டிப்போட்டுள்ள சங்கிலிகளில் இருந்து அவர்களை விடுவிக்கவும், அவர்களின் வருமான வழிகளுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அளிக்கவும் பெரும் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன. இவற்றுடன், வேளாண் உள்கட்டமைப்புக்கு பல முதலீடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. சார்பு நடவடிக்கைகளான மீன் வளத்துக்கும் நிதித் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒவ்வொரு நடவடிக்கையிலும் கருணையையும், சுறுசுறுப்பையும் இந்திய அரசு காட்டியுள்ளது.
आज कैबिनेट ने कई महत्वपूर्ण और ऐतिहासिक फैसले लिए। इनसे हमारे अन्नदाताओं, मजदूरों और श्रमिकों के जीवन में बड़े सकारात्मक बदलाव आएंगे। सरकार के इन निर्णयों से किसानों, रेहड़ी-पटरी वालों और एमएसएमई को जबरदस्त लाभ पहुंचने वाला है। https://t.co/jgGTO4gKH1
— Narendra Modi (@narendramodi) June 1, 2020
आत्मनिर्भर भारत अभियान को गति देने के लिए हमने न केवल MSMEs सेक्टर की परिभाषा बदली है, बल्कि इसमें नई जान फूंकने के लिए कई प्रस्तावों को भी मंजूरी दी है। इससे संकटग्रस्त छोटे और मध्यम उद्योगों को लाभ मिलेगा, साथ ही रोजगार के अपार अवसर सृजित होंगे।
— Narendra Modi (@narendramodi) June 1, 2020
देश में पहली बार सरकार ने रेहड़ी-पटरी वालों और ठेले पर सामान बेचने वालों के रोजगार के लिए लोन की व्यवस्था की है। ‘पीएम स्वनिधि’ योजना से 50 लाख से अधिक लोगों को लाभ मिलेगा। इससे ये लोग कोरोना संकट के समय अपने कारोबार को नए सिरे से खड़ा कर आत्मनिर्भर भारत अभियान को गति देंगे।
— Narendra Modi (@narendramodi) June 1, 2020
'जय किसान' के मंत्र को आगे बढ़ाते हुए कैबिनेट ने अन्नदाताओं के हक में बड़े फैसले किए हैं। इनमें खरीफ की 14 फसलों के लिए लागत का कम से कम डेढ़ गुना एमएसपी देना सुनिश्चित किया गया है। साथ ही 3 लाख रुपये तक के शॉर्ट टर्म लोन चुकाने की अवधि भी बढ़ा दी गई है।
— Narendra Modi (@narendramodi) June 1, 2020
As this Government enters its second year, the Cabinet took important decisions that will have a transformative impact on the MSME sector, our hardworking farmers and street vendors. Today’s decisions will ensure a better quality of life for them. https://t.co/5QtQL2djtT
— Narendra Modi (@narendramodi) June 1, 2020
MSME sector is of great importance for us. Decisions taken for the MSME sector in today’s Cabinet meet will draw investments, ensure ‘Ease of Doing Business’, and easier availability of capital. Many entrepreneurs will gain from the revised definition of MSMEs.
— Narendra Modi (@narendramodi) June 1, 2020
India will prosper when our farmers prosper. Our Government has fulfilled its promise to our hardworking farmers, of fixing the MSP at a level of at least 1.5 times of the cost of production. Care has also been taken towards improving the financial situation of our farmers.
— Narendra Modi (@narendramodi) June 1, 2020
PM Street Vendor's AtmaNirbhar Nidhi (PM SVANidhi) is a very special scheme. For the first time, our street vendors are a part of a livelihood programme. This scheme will ensure support for street vendors. It harnesses technology and emphasises on capacity building.
— Narendra Modi (@narendramodi) June 1, 2020