Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் மற்றும் தென் ஆப்பிரிக்கக் குடியரசின் அதிபர் ஆகியோரிடையேயான தொலைபேசி உரையாடல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று தென் ஆப்பிரிக்கக் குடியரசின் அதிபர் திரு.சிரில் ரமபோசாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

இரு தலைவர்களும் கோவிட் – 19 கொள்ளை நோயால் உள்நாடு, பிராந்திய மற்றும் சர்வதேசத்துக்கு எதிராக ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து தங்களுடைய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தங்கள் நாட்டு மக்களின் நலனைப் பாதுகாக்கவும், அதேசமயம் பொருளாதாரத் தாக்கத்தை குறைக்கவும், தங்களுடைய அரசுகள் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் கலந்தாலோசித்தனர்.

இந்த சவாலான காலக்கட்டத்தில் இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்து பொருள்களின் வழங்கலை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

இந்த கொள்ளைநோய் காலத்தில், ஆப்பிரி்க்க நாடுகள் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் அதிபர் ரமபோசா, கண்டங்கள் அளவிலான ஒருங்கிணைப்புப் பணியில் சிறப்பாகச் செயல்படுவதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

மேலும், இந்தியா – ஆப்பிரிக்கா இடையிலான நூற்றாண்டுகளை கடந்த நட்புறவு மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள் ஆகியவற்றை எடுத்துக்கூறிய பிரதமர் மோடி, வைரசுக்கு எதிரான ஆப்பிரிக்காவின் நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும் உறுதி அளித்தார்.