Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசியில் கலந்துரையாடல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் மாண்புமிகு திரு. பெஞ்சமின் நேதன்யாகுவுடன் இன்று தொலைபேசியில் கலந்துரையாடினார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பிரச்சினை குறித்தும், சுகாதார நெருக்கடியைக் கையாள்வதில் தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகள் பற்றியும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஒத்துழைப்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி அவர்கள் ஆய்வு செய்தனர். மருந்துப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் ஆகியவற்றைக் கிடைக்கச் செய்யும் நிலையை மேம்படுத்துவதும், உயர் தொழில்நுட்பத்தின் புதுமைச் சிந்தனைகளை மேம்படுத்துவதும் இதில் அடங்கும். இதுபோன்ற ஒருங்கிணைப்புகளுக்காக தகவல் தொடர்பு வசதிகளைப் பராமரிப்பதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கோவிட்-19, நவீன கால வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருக்கிறது என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கருத்தை மாண்புமிகு திரு. நேதன்யாகு ஏற்றுக்கொண்டார். மனிதகுலத்தின் நலன்களை மையமாகக் கொண்டு உலகளாவிய நிலையில் புதிய தொலைநோக்கு சிந்தனையை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இது இருக்கிறது என்ற கருத்தையும் இஸ்ரேல் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.