Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநில தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை தனி மாநில அந்தஸ்து பெற்ற தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடி, அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“மிசோரம் மாநில தினத்தையொட்டி, அந்த மாநிலத்தின் வியத்தகு மக்களுக்கு நல்வாழ்த்துகள். இந்த மாநிலத்தின் கலாச்சார வளம் நம்மை பெருமிதமடையச் செய்கிறது. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவதோடு, இந்தியாவின் வளர்ச்சிக்கும் மிகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். வரும் ஆண்டுகளில் மிசோரமின் வளர்ச்சிக்காக பிரார்த்திக்கிறேன்.

அருணாச்சலப் பிரதேச மாநில தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்கு நல்வாழ்த்துகள். தேசப்பற்று மிக்க இம்மாநிலம், நாட்டின் வளர்ச்சியிலும், நிலையான உறுதிப்பாட்டைக் கொண்டதாகும். அருணாச்சலப் பிரதேசம் தொடர்ந்து வளர்ச்சியடைய பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

மிசோரம் மாநில தினத்தையொட்டி, அந்த மாநிலத்தின் வியத்தகு மக்களுக்கு நல்வாழ்த்துகள். இந்த மாநிலத்தின் கலாச்சார வளம் நம்மை பெருமிதமடையச் செய்கிறது. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவதோடு, இந்தியாவின் வளர்ச்சிக்கும் மிகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். வரும் ஆண்டுகளில் மிசோரமின் வளர்ச்சிக்காக பிரார்த்திக்கிறேன்.

அருணாச்சலப் பிரதேச மாநில தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்கு நல்வாழ்த்துகள். தேசப்பற்று மிக்க இம்மாநிலம், நாட்டின் வளர்ச்சியிலும், நிலையான உறுதிப்பாட்டைக் கொண்டதாகும். அருணாச்சலப் பிரதேசம் தொடர்ந்து வளர்ச்சியடைய பிரார்த்திக்கிறேன்.