சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்குழு உறுப்பினரும் ஷாங்காய் பகுதி கட்சி செ யலாளருமான திரு. ஹான் ஜெங்க் பிரதமரை இன்று சந்தித்தார்.
சென்ற ஆண்டு சீனாவில் பயணம் மேற்கொண்ட போது ஷாங்காய் நகரில் திரு. ஹான் ஜெங்க்கை சந்தித்துப் பேசியதை பிரதமர் அன்புடன் நினைவுக் கூர்ந்தார். பிரதமர் சென்ற ஆண்டு ஷாங்காய் நகருக்கு வருகை தந்தது இந்தியா குறித்த அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் ஷாங்காய் நகரில் இருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கையை அதிகரித்ததாகவும் திரு. ஹான் ஜெங்க் பிரதமர் திரு. நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.
மும்பை – ஷாங்காய் சகோதரி நகர உடன்பாடு இந்தியா – சீனா நாடுகளின் பொருளாதாரத் தலைநகரங்களுக்கிடையே மேலும் வலுவான உறவுகளுக்கு அடித்தளம் அமைத்ததாக பிரதமர் கூறினார். இந்தியா – சீனா மாகாணத் தலைவர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டதை அடுத்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே இருதரப்பு உறவுகள் விரிவடைந்து வலுவடைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் திரு. நரேந்திர மோடியும் திரு. ஹான் ஜெங்-கும் நடப்பு உலக பொருளாதார விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இந்தியாவிலும் சீனாவிலும் ஏற்பட்டுள்ள வலுவான பொருளாதார வளர்ச்சி உலக பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உந்து விசையாக செயல்பட முடியும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
CPC Party Secretary of Shanghai, Han Zheng met PM @narendramodi. pic.twitter.com/tJAya9a5dP
— PMO India (@PMOIndia) May 5, 2016