Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தலைமைக் கணக்காயர்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்ற உள்ளார்


 

புதுதில்லியில் உள்ள இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி அலுவலகத்தில் நாடு முழுவதும் உள்ள தலைமைக் கணக்காயர்கள் மற்றும் உதவி தலைமை கணக்காயர்கள் மாநாடு நாளை (நவம்பர் 21, 2019) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். அதற்கு முன் இந்த அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் உருவச் சிலையையும் அவர் திறந்து வைப்பார்.

‘டிஜிட்டல் உலகத்தில், மாறி வரும் தணிக்கை மற்றும் உறுதிமொழி’ என்பதை மையப்பொருளாக கொண்டு அனுபவத்தையும், கற்றலையும் ஒருமுகப்படுத்த இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறைக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கான பாதையை வகுப்பதாகவும் இது இருக்கும். இந்தத் துறையை தொழில்நுட்பம் வழிநடத்தும் அமைப்பாக மாற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறியவும் தற்போது விரைவாக மாறி வரும் கொள்கை மற்றும் நிர்வாகச் சூழலுக்கு ஏற்ப தகவல்கள் வழங்குவதை அரசு எவ்வாறு அதிகரித்து வருகிறது என்பது பற்றியும் குழு விவாதங்கள் நடத்தப்படும்.

புதிய யுகத்தில் தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும் இந்தியா, சவால்களை சந்திப்பதற்கு ஏற்ற வகையில், கணக்குத் தணிக்கைத் துறையில் கடந்த 5 ஆண்டுகளாக மாற்றத்தை நோக்கி முன்னேறி வருகிறது.

 

*****