Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் இந்தியா – சுவிட்சர்லாந்து இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – சுவிட்சர்லாந்து இடையே, பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் 13 செப்டம்பர், 2019 அன்று கையெழுத்தானது.

முக்கிய விளைவு:

சுற்றுச்சூழல் சீர்கேடுகள், சமுதாயத்தின் மேம்பட்ட பிரிவினரைவிட, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினரிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத் தடுக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும், வலுவான சுற்றுச்சூழல் வளங்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.