Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி, கெவாடியாவில் பிரதமர் தேசிய ஒற்றுமை உறுதிமொழியை செய்து வைத்தார்


தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி கெவாடியாவில் உள்ள ஒற்றுமைக்கான சிலை முன்பாக தேசிய ஒற்றுமைதின உறுதிமொழியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று செய்து வைத்தார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்த பல்வேறு காவல்துறைக் குழுக்களின் தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு மரியாதையையும் அவர் பார்வையிட்டார்.

 

2014-லிருந்து அக்டோபர் 31-ம் தேதி, தேசிய ஒற்றுமை தினமாக   கடைப்பிடிக்கப்படுவதுடன், வாழ்க்கையின் அனைத்துத் தரப்பையும் சேர்ந்த மக்கள் நாடு முழுவதும் நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கேற்கின்றனர்.

 

குஜராத் மற்றும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வந்த மாணவர் படையின் சார்பில் கொடியேந்திச் சென்றவர்கள், ‘ஒன்றுபட்ட பாரதம் ஒப்பிலா பாரதம்’ அணிவகுப்பு மரியாதையைப் பிரதமருக்கு அளித்தனர். தேசிய பாதுகாப்புப்படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, குஜராத் காவல்துறை மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு காவல் படையினர், பிரதமர் முன்னிலையில் பல்வேறு சாகசங்கள் செய்ததுடன், செயல்விளக்கமும் அளித்தனர். 

பின்னர், கெவாடியாவில் தொழில்நுட்ப செயல் விளக்க மையத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு காவல் படைகளின் அரங்குகளுக்குச் சென்ற பிரதமர், விமானப் பாதுகாப்பு, காவல்துறை நவீன மயமாக்கல் தொடர்பான அதிநவீன தொழில்நுட்பங்களை பார்வையிட்டார்.

 

தேசிய பாதுகாப்புப் படையின் கருப்புப் பூனைப் படையினர், அவர்களது அசால்ட் கே-9 குழுவுடன் இணைந்து வல்லமைமிக்க அணியை உருவாக்கிக்காட்டினர்.

 

இங்கு நடைபெற்ற செயல் விளக்கத்தின்போது, கமாண்டோக்கள் மற்றும்  பயிற்சி பெற்ற நாய்கள், வீட்டுக்குள் நுழைவதைப் போன்ற ஒத்திகையின்போது, தீவிரவாதி போன்ற ஒருவரை பிடித்துக் கொடுத்தன.

@nsgblackcats   #RashtriyaEktaDiwas #SardarVallabhbhaiPatel

 

 

நீங்கள் பெண்களைப்போல சண்டையீட்டீர்கள்..!!

 

மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் குஜராத் காவல்துறை வீரர்கள் மற்றவர்களைவிட சிறப்பாக  செயல் விளக்கம் அளித்தனர்.

 

மோட்டார் சைக்கிள் சாகசத்தின்போது அவர்களது திறமையை வெளிப்படுத்தினர்

@crpfindia and @GujaratPolice