Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி விழாவுக்கு ஏற்பாடு


புதுதில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்காக தீபாவளி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் பிரதமர் திரு.நரேந்திர மோடி இனிய தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் மேற்கொண்ட சிறந்த பணியைப் பாராட்டிய பிரதமர், ஊழியர்களின் தொடர்ச்சியான முயற்சி மற்றும் கடின உழைப்பு காரணமாகவே அரசால் சிறந்த மாற்றங்களை செய்ய முடிந்துள்ளது என்று கூறினார். முந்தைய ஆண்டில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்து, வரும் ஆண்டில் புதிய உச்சத்தை எட்ட முயற்சிக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் அலுவலகம் அரசு முழுவதற்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். பிரதமர் அலுவலகம் பணிகளை திறம்படச் செய்வதுடன், மற்ற துறைகளுக்கு முன்னோடியாக ஊக்கமளிக்கிறது என்று அவர் கூறினார். பிரதமர் அலுவலக ஊழியர்கள் தங்களது நெறிமுறைகள் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பால் பிற துறைகளை ஊக்குவிப்பவர்களாக இருக்க வேண்டுமென்று பிரதமர் வலியுறுத்தினார். 2022 ஆம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்னதாக குறிக்கோள்களை அடைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கோடிக்கணக்கான மக்களின் கனவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கு பிரதமர் அலுவலகம் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.