Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எல்லைப் பாதுகாப்புப் படையின் நான்காவது பட்டாளியன் தலைமை இடம் அமைப்பதற்கென ஃபராக்காவில் உள்ள ஃபராக்கா நீர்த்தேக்கத் திட்டத்துக்கு சொந்தமான 58.81 ஏக்கர் நிலத்தை எல்லைப் பாதுகாப்புப் படைக்கு மாற்றிக் கொடுத்தல்


மத்திய நீராதாரங்கள், நதிமேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஃபராக்கா நீர்த்தேக்கத் திட்டத்தில் உபரியாக உள்ள 58.81 ஏக்கர் நிலத்தை உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதன் நான்காவது பட்டாலியன் தலைமை இடத்தை மேற்கு வங்க மாநிலத்தில் மால்டா மாவட்டத்தில் கேஜூரியாகட் என்ற இடத்தில் அமைப்பதற்கு மாற்றித் தரும் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஃபராக்கா நீர்த்தேக்கத் திட்டம் அருகே மால்டா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவு தலைமையகம் அமைவதால் ஃபராக்கா நீர்த்தேக்கத் திட்டமும் பாதுகாப்பு நன்மைகளைப் பெறும். மேலும் இத்திட்டத்தின் அருகே எல்லைக் காவல்படை வீரர்கள் நிலைப்படுத்தப்படுவதால் இத்திட்டத்தின் நிலத்தில் ஆக்கிரமிப்பு சாத்தியக் கூறுகளும் வெகுவாகக் குறையும். இந்தத் திட்டத்தின் பாதுகாப்புக் குறித்த கவலைகளும் அகற்றப்படும்.


***