Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தோ – திபெத் எல்லைக்காவல் படையின் பணிநிலைப் பிரிவை ஆய்வு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

பிரதமர் திரு நரேந்திர  மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தோ – திபெத் எல்லைக்காவல் படையின் பணிநிலைப் பிரிவை ஆய்வு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இந்தப் படையின் குறிப்பிட்ட பணிநிலைப் பிரிவுகளில் விரிவாக்கம் செய்யப்படும். புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதன் மூலம், இந்தோ – திபெத் எல்லைக்காவல் படையின் கண்காணிப்புத்திறன் மற்றும் படைத்திறன் அதிகரிக்கும்

 

 மேலும்,  சண்டிகரில்  மேற்குத் தலைமைப் பிரிவும், கவுஹாத்தியில் கிழக்குத் தலைமைப் பிரிவும் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.