Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில் இந்தியா-கினியா ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் ஹோமியோபதி துறையில் இந்தியா-கினியா அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், கினியா சென்ற போது, 2 ஆகஸ்ட் 2019 அன்று கையெழுத்தானது.

முக்கிய விளைவுகள்:

பாரம்பரிய மருத்துவ முறைகளில் இருநாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப் புரிந்துணர்வு வகை செய்கிறது. இரு நாடுகளின் கலாச்சார பாரம்பரிய அடிப்படையில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

செலவு மதிப்பீடு:

இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த கூடுதல் நிதி ஏதும் தேவைப்படாது. ஆயுஷ் அமைச்சகத்தால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு, ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஆதாரங்களைக் கொண்டே, ஆராய்ச்சி, பயிற்சி வகுப்புகள், மாநாடுகள் / கூட்டங்கள் நடத்தப்படுவதுடன், நிபுணர்கள் பரிமாற்றமும் மேற்கொள்ளப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in. என்ற இணையதளத்தைக் காணவும்.

*****