Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரம்பரிய மருத்துவ முறைகளிலான துறையில் இந்தியா மற்றும் காம்பியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் காம்பியா இடையே பாரம்பரிய மருத்துவ முறைகளிலான துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் வருகையின் போது ஜூலை 31, 2019-ல் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் காம்பியாவில் கையெழுத்திடப்பட்டது.

இந்தியா மற்றும் காம்பியா இடையே பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளும் இந்தத் துறையில் பரஸ்பரம் பயன்பெறும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகள், காம்பியாவில் ஆயுஷ் மருத்துவ முறைகளை ஊக்குவிக்கும் வகையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக, மருத்துவர்களின் பயிற்சிக்காக நிபுணர்களின் பரிமாற்றம் மற்றும் விஞ்ஞானிகள் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கூட்டாக ஆய்வு மேற்கொள்வது ஆகியவை மருந்து உற்பத்தி மேம்பாட்டிலும் மற்றும் பாரம்பரிய மருத்துவ நடைமுறையிலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உந்துதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

****