இந்திய வெளியுறவுத் துறை சேவைப் பிரிவில் 2014 மற்றும் 2015ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த அதிகாரிகளாக பயிற்சியை முடித்த 64 பேர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது, இளம் அதிகாரிகளை ஊக்கப்படுத்திய பிரதமர் மோடி, தனது எண்ணங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். வெளி உலகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தும் விதமாக பணியாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். தங்கள் பதவியையும், பணியையும் ஆழமாகப் புரிந்து கொண்டு மேம்பாட்டுக்கு துணைபுரிய வேண்டும், கூட்டாட்சியின் ஒத்துழைப்போடு இந்திய மாநிலங்களை வெளி உலகத்துடன் இணைக்க வேண்டும், மக்களிடையேயான கலாச்சார தொடர்புகள், வர்த்தகத்தை வலுப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்ப உறவை மேம்படுத்துதலை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிக கவனமும், அவர்களின் நலனில் அக்கறையும் கொள்ள வேண்டும் போன்ற ஆலோசனைகளைப் பிரதமர் நரேந்திர மோடி, அதிகாரிகளுக்கு வழங்கினார்.
Met our young diplomats…officer trainees of the IFS. pic.twitter.com/BjgevKEzmN
— Narendra Modi (@narendramodi) April 5, 2016