Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாரணாசியில் பிரதமர் பயணம்


 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.07.2019) பயணம் செய்தார்.  பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

PM India

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் திரு  லால் பகதூர் சாஸ்திரியின் உருவச்சிலையைப் பிரதமர் திறந்து வைத்தார்.  பின்னர் வாரணாசியில் உள்ள ஆனந்த் கனன் வாடிகாவில் மரக்கன்றுகள் நடும் இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

 

 

PM India

 

இதைத் தொடர்ந்து மன் மகாலில் உள்ள மெய்நிகர் அருங்காட்சியகத்திற்குப் பிரதமர் சென்றிருந்தார்.  நமது பாரம்பரியத்தின் பல்வேறு அம்சங்களைக் காட்சிப்படுத்தும் இந்த அருங்காட்சியகம் வாரணாசி நகரின் கலாச்சாரக் குறியீடாக விளங்கும் தஷஷ்வமேத் சதுக்கத்தில் அமைந்துள்ளது.

***