Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஊரக வளர்ச்சி திட்டம் – பிரதமர் ஆய்வு


ஊரக வளர்ச்சி திட்டம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி திங்கள் கிழமை ஆய்வு செய்தார்.

பிரதமர் கிராம சாலை திட்டம் மற்றும் தீன்தயாள் அந்தியோதயா திட்ட வளர்ச்சி குறித்து நித்தி ஆயோக் பிரதமருக்கு விளக்கக் காட்சி மூலம் விவரித்தது.

நிதி ஆண்டு 2015-16 ல் நாள் தோறும் சராசரியாக 91 கிலோமீட்டர் தூரத்திற்கு ஊரக சாலைகள் அமைக்கப்பட்டது. இதனால், 30,500 கிலோமீட்டர் தூரத்திற்கு ஊரக சாலைகள் வளர்ந்து உள்ளது. இந்த நிதி ஆண்டில் 6500 வாழ்விடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கிராம சாலை திட்டத்தில் ஊரக சாலைகள் அமைப்பதை விரைவுப்படுத்த மேற்கொள்ளப்படும் சிறந்த முயற்சிகள் குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. இதில் ஜி.ஐ.எஸ், திட்டமிடுதல் மற்றும் கண்காணிப்பிற்கான விண்வெளி புகைப்படங்கள், சாலைகளில் போடப்படும் எண்ணிக்கையை குறைத்து நிதியை சரியாக பயன்படுத்துவது, “மேரி சடக் (எனது சாலை)” என்ற செயலி மூலம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது அடங்கும்.

இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகள் தரமாக அமைய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். பொருட்கள் கொள்முதல், கட்டமைப்பு, பராமரிப்பு ஆகிய நிலைகளில் தர சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.