Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக சூஃபி மாநாடு – பிரதமர் பங்கேற்கிறார்


புது தில்லியில் நடைபெறும் உலக சூஃபி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மாலை பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

அதிகரித்து வரும் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் சூஃபியின் பங்கு குறித்து விவாதிக்கும் இம்மாநாட்டை அகில இந்திய உலாமா மற்றும் மஷாய்க் வாரியமும் இணைந்து நடத்துகின்றன.

மதத்தின் பெயரில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தையும் அடிப்படை வாதத்தையும் எதிர்கொள்ளும் வகையில் நீண்ட கால தீர்வுகள் குறித்த விவாதங்கள் இம்மாநாட்டில் நடைபெறும். சர்வதேச அளவில் இஸ்லாமின் நவீன கொள்கைகளின் மையங்களில் இந்தியாவின் இடத்தை மீண்டும் உறுதி செய்யவும் அதன் முக்கியதுவத்தையும் இம்மாநாடு உணர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று துவங்க உள்ள இந்த நான்கு நாள் மாநாட்டில், 20 நாடுகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்து, ஜோர்டான், துருக்கி, இங்கலாந்து, அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து ஆன்மிக தலைவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், இறையியல் நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


***