தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டது. கடந்த 15 நாட்களாக நடைபெற்று வந்த இந்த தூய்மைப் பணி இன்று (15.03.2016) நிறைவு பெற்றது. இந்த தூய்மைப் பணி மூலம் தேவையற்ற சுமார் 10,000 கோப்புகள் அழிக்கப்பட்டன. மேலும் முக்கியமான 1000 கோப்புகள் இந்திய தேசிய ஆவணக்காப்பகத்திற்கு அனுப்பப்பட்டன.
பிரதமரின் தலைமை செயலர் திரு. நிரிபேந்திர மிஸ்ராவின் தலைமையில் நடைபெற்ற இந்த தூய்மை பணியில் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளும், ஊழியர்களும் தன்னார்வத்தோடு பங்கேற்றனர். இதன் மூலம் பிரதமர் அலுவலகத்தின் மேற்கு நுழைவாயிலில் உள்ள புல்வெளி சுத்தம் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. மேலும், பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு குப்பைகள் அகற்ற பட்டன. இ-கழிவுகளும் அகற்றப்பட்டன.
2014 மே, பிரதமராக பொறுப்பேற்றவுடன் திரு. நரேந்திர மோடி பிரதமர் அலுவலகத்தை ஆய்வு செய்தார், அப்போது, அலுவலகத்தில் தூய்மையை கடைபிடிக்குமாறு பிரதமர் வலியுறித்தினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு நடக்கும் மூன்றாவது தூய்மைப் பணி இது.
பிரதமரின் உத்தரவின்படி பல தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரசீதுகள் மற்றும் கோப்புகளை செயலாக்கமுறையும் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து கடிதம் மூலமாக வரும் மனுக்களும் மின்னஞ்சல் மூலமாக வரும் மனுக்களும் பிரிக்கப்பட்டு “மின்னணு அஞ்சல் மேலாண்மை முறை (Electronic Mail Management System) மூலமாக நிர்வகிக்கபடுகிறது. இதன் மூலமாக மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் நேரம் ஒரு மாதத்தில் இருந்து ஒரு நாளாக குறைக்கபடுகிறது. இணையம் மூலமாக மிக முக்கிய பிரமுகர்களின் கடிதம் மேலாண்மை முறை, சந்திப்பு மேலாண்மை முறை உள்ளிட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலமாக பிரதமர் அலுவலக பணிகள் எளிமையாகவும் குறைந்த நேரத்திலும் செயல்பட முடிகின்றது. .
2014 மே மாதம் முதல் சுமார் ஐந்து லட்சம் கோப்புகள் அழிக்கப்பட்டன. இதன் மூலம் இரண்டு பதிவறைகள் மற்ற பணிகளுக்கு பயன் படும் வகையில் தயாராக உள்ளது. பணிச் சூழலின் தரத்தை உயர்த்த புதிய பணிநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பிரதமர் அலுவலகத்தின் சவுத் பிளாக்கில் உள்ள 1800 சதுர அடி அலுவலக இடம் மிச்சம் பிடிக்கப்பட்டது. சவுத் பிளாக்கில் முன்பு இடமில்லா காரணத்தினால் ரயில் பவனில் பணிபுரிந்த 50 அலுவலர்கள் தற்போது மீண்டும் சவுத் பிளாக்கிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தூய்மை மற்றும் பணிமுறை மேலாண்மை, பிரதமர் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
A special cleanliness drive under Swachh Bharat Abhiyan, spanning over a fortnight was completed today https://t.co/DtVqxgm93V #MyCleanIndia
— PMO India (@PMOIndia) March 15, 2016