Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

(ஏ) இந்தியாவின் அணுகுமுறை திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்: சர்வதேச அளவில் வகைப்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான பதிவு குறியீடுகளுக்கான நைஸ் ஒப்பந்தம்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை (1) சர்வதேச அளவில் வகைப்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான பதிவு குறியீடுகள் தொடர்பான நைஸ் ஒப்பந்தம்.

(2) சர்வதேச அளவில் வகைப்படுத்தப்பட்ட அடையாள அர்த்தமுள்ள கூறுகள் குறித்த வியன்னா ஒப்பந்தம் (3) தொழில் துறை வடிவமைப்புகளுக்கான சர்வதேச வகைபாடுகளை உருவாக்குவதற்கான லோகர்னோ ஒப்பந்தம் ஆகியவற்றுக்கான இந்தியாவின் அணுகுமுறை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது.

நைஸ், வியன்னா மற்றும் லோகர்னோ ஒப்பந்தங்களில் தொடர்பு ஏற்படுத்துவது இந்தியாவில் அறிவுசார் சொத்து அலுவலகத்திற்கு உதவும். உலகளவில் பின்பற்றப்படும் பகுப்பாய்வுகளின்படி வணிக முத்திரை மற்றும் வடிவமைப்பு விண்ணப்பங்களுக்கான பிரிவுகளை இது எளிதாக்கும்.

சர்வதேச பகுப்பாய்வு அமைப்புகளில் இந்திய வடிவமைப்புகள், அடையாள அர்த்தமுள்ள கூறுகள் மற்றும் பொருள்கள் இடம் பெறுவதற்கு இது வாய்ப்பளிக்கும்.

இந்த தொடர்பு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் அறிவுசார் சொத்து அலுவலகங்கள் தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றியமைப்பதில் மறுஆய்வு மற்றும் முடிவு மேற்கொள்வதற்கான நடைமுறைகளில் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு ஒப்பந்தத்தின் கீழ் வசதி செய்யப்படும்.