பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உலக கலாச்சார விழாவில் பங்கேற்க இந்தியா வந்திருக்கும் சுரிநாம் குடியரசின் துணைத் தலைவர் திரு. மைக்கேல் ஏ. அதின் அவர்களை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, சுரிநாம் நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினர் அந்த நாட்டின் வளர்ச்சியில் மட்டுமின்றி இரண்டு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று ரீதியான உறவுகளை வலுப்படுத்துவதிலும் தீவிரமான பங்காற்றுவதை பிரதமர் பாராட்டினார். கொள்திறனை வளர்த்தெடுப்பது, மனித வள மேம்பாடு ஆகிய துறைகளில் அனைத்து விதமான உதவிகளையும் சுரினாம் குடியரசிற்கு தொடர்ந்து வழங்குவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றும் பிரதமர் அவரிடம் தெரிவித்தார்.
********
Mr. Ashwin Adhin, Vice President of Suriname met PM @narendramodi. pic.twitter.com/lmggamn3Cp
— PMO India (@PMOIndia) March 11, 2016