Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் மோடி அவர்கள் பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தை தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி அவர்கள் பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தை தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி அவர்கள் பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தை தொடங்கி வைத்தார்

பிரதமர் மோடி அவர்கள் பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தை தொடங்கி வைத்தார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று குஜராத் மாநிலம் வஸ்த்ரால் நகரில் பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தை தொடங்கி வைத்தார். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்திற்கான ஓய்வூதிய அட்டைகளையும் அவர் வழங்கினார். நாடு முழுவதிலும் உள்ள 3 லட்சம் பொதுச் சேவை மையங்களில் இருந்து காணொளிக் காட்சியின் மூலம் இந்த நிகழ்வை இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கண்டு களித்தனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் இது என்று குறிப்பிட்ட பிரதமர் நாட்டில் உள்ள அமைப்புசாரா பிரிவைச் சேர்ந்த 42 கோடி தொழிலாளர்களுக்கு இந்த பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தை அர்ப்பணித்தார். இத்திட்டத்தில் இணையும் அமைப்புசாரா பிரிவைச் சேர்ந்த தொழிலாளர் தங்கள் முதுமை காலத்தில் மாதம் ரூ. 3000 ஓய்வூதியமாக பெறுவதை உறுதி செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அமைப்புசாரா பிரிவைச் சேர்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு என இது போன்ற ஒரு திட்டம் நாடு விடுதலை பெற்ற பிறகு முதல் முறையாக இப்போதுதான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

இத்திட்டத்தின் பயன்களைப் பற்றியும் பிரதமர் விரிவாக விளக்கிக் கூறினார். இத்திட்டத்தில் சேரும் பயனாளிகள் செலுத்தும் தொகைக்கு இணையான தொகையை மத்திய அரசு செலுத்தும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மாதத்திற்கு ரூ. 15,000க்கும் குறைவாக வருமானம் பெறக்கூடிய அமைப்புசாரா பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் அருகிலுள்ள பொதுச் சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இத்திட்டத்தில் சேருவதற்கான செயல்முறைகளில் எந்தவொரு இடையூறுகளும் இருக்காது என்று உறுதியளித்த பிரதமர் திரு. மோடி, பயனாளிகள் தங்களது ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு படிவத்தை மட்டுமே பூர்த்தி செய்து தரவேண்டியிருகும் என்றும் கூடியிருந்தவர்களிடையே தெரிவித்தார். இவ்வாறு ஒரு பயனாளியை சேர்ப்பதற்கு பொதுச் சேவை மையத்திற்கு ஆகும் செலவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். ‘டிஜிட்டல் இந்தியாவின் அற்புதம் இது’ என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தங்கள் வீட்டிலோ அல்லது அருகாமை இடங்களிலோ வசிக்கும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை இத்திட்டத்தில் சேர்ப்பதற்கு உதவ வேண்டும் என்றும் பிரதமர் மக்களை கேட்டுக் கொண்டார். இது தொடர்பான வசதிபடைத்த பிரிவினரின் நடவடிக்கைகள் ஏழைகளுக்கு பெருமளவிற்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். உழைப்புக்கு மதிப்பு தருவது என்பது நாட்டை மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் முன்முயற்சியால் துவக்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத், பிரதமர் ஜீவன் ஜோதி பீமா திட்டம், பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமர் வீட்டுவசதி திட்ட்டம், மின்வசதி திட்டம், சவுபாக்யா திட்டம், தூய்மை இந்தியா ஆகிய திட்டங்கள் குறிப்பாக அமைப்புசாரா பிரிவுகளில் பணிபுரிவோரையே இலக்காக கொண்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். நாட்டில் உள்ள பெண்கள், பெண் குழந்தைகள் ஆகிய பிரிவினருக்கு வலுச் சேர்ப்பதற்காக எடுக்கப்பட்ட முன்முயற்சிகள் குறித்தும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த பிரதமர் ஷ்ரம் யோகி மான் – தன் திட்டத்தோடு கூடவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சுகாதார வசதி, பிரதமர் ஜீவன் ஜோதி பீமா திட்டம் மற்றும் பிரதமர் ஆயுள் காப்பீட்டு திட்டம் போன்றவை வழங்கும் ஆயுள் மற்றும் உடல் ஊனம் ஆகியவற்றுக்கான காப்பீட்டு வசதிகள் ஆகியவை அமைப்புசாரா பிரிவில் உள்ள தொழிலாளர்களுக்கு அவர்களின் முதிய வயதில் முழுமையான சமூகப் பாதுகாப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதாக இருக்கும்.

ஊழலுக்கு எதிரான தன் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் இடைத்தரகர்கள் மற்றும் ஊழலை முற்றிலுமாக அகற்ற தமது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். பிரதமர் தாம் எப்போதும் விழிப்புடன் இருப்பதாகவும் மேலும் கூறினார்.

******