Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சவுதி அரேபியா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சருடன் பிரதமர் சந்திப்பு

சவுதி அரேபியா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சருடன் பிரதமர் சந்திப்பு


சவுதி அரேபியா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் திரு. அடேல் பின் அகமது அல் ஜுபிர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.

சவுதி அரேபியாவுடன் இருக்கும் நெருங்கிய நட்புறவிற்கு இந்தியா என்றும் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவின் வெளியுறவு கொள்கையில் இந்தியாவுடனான உறவிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளதாக சவுதி அரேபியா நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் கூறினார்.

வர்த்தகம், முதலீடு, மின் ஆற்றல், மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற பல்வேறு துறைகளில் இருநாட்டுக்கும் இடையே உள்ள உறவினை மேலும் வலுபடுத்துவதற்கான தங்களின் கருத்துக்களை இரு தலைவர்களும் பகிர்ந்துகொண்டனர். ஆசிய பகுதியின் நிலைமையை குறித்து பேசிய இவர்கள் இப்பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்று இரு நாடுகளும் விரும்புவதாக ஒப்புக்கொண்டனர்.

சவுதி அரேபியாவிற்கு தான் மேற்கொள்ளவிருக்கும் பயணம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவினை மேலும் வலுபடுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.


***