Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இட்டா நகருக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் வடகிழக்கு வளர்ச்சியடையும்போது மட்டும்தான் புதிய இந்தியாவைக் கட்டமைக்க முடியும் என்றார்

இட்டா நகருக்குப் பயணம் மேற்கொண்ட  பிரதமர் வடகிழக்கு வளர்ச்சியடையும்போது மட்டும்தான் புதிய இந்தியாவைக் கட்டமைக்க முடியும் என்றார்

இட்டா நகருக்குப் பயணம் மேற்கொண்ட  பிரதமர் வடகிழக்கு வளர்ச்சியடையும்போது மட்டும்தான் புதிய இந்தியாவைக் கட்டமைக்க முடியும் என்றார்

இட்டா நகருக்குப் பயணம் மேற்கொண்ட  பிரதமர் வடகிழக்கு வளர்ச்சியடையும்போது மட்டும்தான் புதிய இந்தியாவைக் கட்டமைக்க முடியும் என்றார்


அருணாச்சலப்பிரதேசம், அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் திரு.நரேந்திர மோடி இட்டா நகருக்கு பயணம் மேற்கொண்டார். இட்டா நகர் புதிய விமான நிலையத்திற்கும் சேலா சுரங்கப்பாதைக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். டிடி அருண்பிரபா அலைவரிசையைத் தொடங்கி வைத்தார். இட்டா நகரில் உள்ள ஐஜி பூங்காவிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கான பல வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அங்கு கைகளால் இயக்கும் நெசவுப் பணிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அருணாச்சல் என்பது சூரிய உதயத்தின் பூமியாகும் என்றார். இது நாட்டின் நம்பிக்கையாகவும் இருக்கிறது. “இன்று ரூ.4,000 கோடிக்கும் அதிகம் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்” என்று பிரதமர் கூறினார். இம்மாநிலத்தில் கூடுதலாக ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். அருணாச்சலப்பிரதேசத்திலும் மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளில் தமது அரசின் 55 மாதங்களோடு, முந்தைய அரசுகளின் 55 ஆண்டுகாலத்தை ஒப்பிட்டுப் பார்க்குமாறு பிரதமர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

வளர்ச்சி எப்படி நடந்திருக்க வேண்டுமோ அப்படி நடக்கவில்லை என்று பிரதமர் கூறினார். “முந்தய அரசு அருணாச்சலப் பிரதேசத்தைப் புறக்கணித்து விட்டது, நாங்கள் அதனை மாற்றி வருகிறோம்” என்று பிரதமர் குறிப்பிட்டார். வடகிழக்கு வளர்ச்சியடையும்போதுதான் புதிய இந்தியாவைக் கட்டமைக்க முடியும் என்று அவர் உறுதியாக தெரிவித்தார். வளர்ச்சி என்பது மக்களையும் நிலப்பகுதிகளையும் இணைப்பதாகும் என்று அவர் மேலும் கூறினார். கடந்த 55 மாதங்களில் வளர்ச்சிப்பணிகளுக்கான நிதிக்கு குறைபாடு இல்லை என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். “முந்தைய அரசுகள் அருணாச்சலப் பிரதேசத்திற்கு வழங்கிய தொகையை விட இரு மடங்காக ரூ.44,000 கோடி நிதியை எமது அரசு ஒதுக்கியுள்ளது” என்றும் அவர் கூறினார்.

ஹோலங்கியில் புதிய விமான நிலையத்தைக் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், கூடுதல் வசதி செய்யப்பட்ட தேசு விமான நிலையத்தைத் தொடங்கி வைத்தார். ஹோலங்கி விமான முனையம் 4,100 சதுர மைல் பரப்பில் ரூ.955 கோடி செலவில் கட்டப்படவுள்ளது. இது அதிகப்பட்சமாக ஒரு மணிக்கு 200 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்று முதல் இம் மாநிலத்தின் போக்குவரத்து இணைப்பு மேம்படும் என்றார். தற்போது வான்வழியாக இட்டாநகர் செல்வதற்கு குவஹாத்தி விமான நிலையத்தில் இறங்கி சாலை வழியாக அல்லது ஹெலிகாப்டர் மூலம்தான் செல்ல முடியும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“தேசு விமான நிலையம் 50 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது என்றும், ஆனால், நாட்டின் இதரப் பகுதிகளுடன் இந்த மாநில மக்களுக்குத் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கம் எந்த அரசுக்கும் இருக்கவில்லை. இந்த சிறிய விமான நிலையத்திற்கு நாங்கள் ரூ.125 கோடி செலவு செய்து விரிவுபடுத்தியிருக்கிறோம். அருணாச்சல் மக்களுக்கு சேவைகள் வழங்க தேசு விமான நிலையம் தயாராகி விட்டது. குறைந்த செலவில் விமானப் பயணம் செய்ய உதான் திட்டம் மக்களுக்கு உதவும். விமான நிலையங்கள் மட்டுமின்றி புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ரயில், சாலை வசதிகள் மூலமாகவும் அருணாச்சலப் பிரதேச மக்களின் வாழ்க்கை பெருமளவு மேம்படும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அருணாச்சலப்பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் அனைத்துப் பருவகாலத்திலும் தாவா பள்ளத்தாக்கு பகுதிக்கு இணைப்பு வசதி கிடைக்கும். மேலும், பயண நேரத்திலும் ஒருமணி நேரம் குறையும். இது, ரூ.700 கோடி மதிப்பில் கட்டப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. போகிபீல் என்ற இடத்தில் ரயில் பாதையாகவும், சாலையாகவும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலம் அருணாச்சல் மக்களை முதன்மையான நிலப்பகுதிக்கு மேலும் நெருக்கமாகக் கொண்டு வரும் என்று பிரதமர் தெரிவித்தார். மாநிலத்தின் போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்த ரூ.1,000 கோடி மதிப்பிலான பணிகளை அரசு செயல்படுத்தி வருகிறது என்றார். கடந்த 2 ஆண்டுகளில் 100 கிராமங்கள் சாலைகள் மூலம் தொடர்புபடுத்தப்பட்டு உள்ளன என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். வடகிழக்கு மாநிலங்களின் அனைத்து தலைநகர்களையும் இணைக்கும் முயற்சியாக இட்டா நகர் ரயில்வேயுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நாஹர்லாகூனிலிருந்து வாரம் இருமுறை அருணாச்சல் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. புதிய ரயில்பாதை அமைப்பதற்கு இம்மாநிலத்தில் ஆறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு 3 இடங்களின் ஆய்வு நிறைவடைந்துள்ளது. ரயில் போக்குவரத்து மூலம் தாவாங் நகரை இணைக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது என்று அவர் கூறினார்.

சவுபாக்யா திட்டத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள வீடுகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 110 மெகாவாட் திறன் கொண்ட பரே நீர் மின் உற்பத்தித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். “மின்சார உற்பத்திக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இன்று 110 மெகாவாட் திறன் கொண்ட 12 நீர் மின் உற்பத்தித் திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன. அருணாச்சலப் பிரதேசத்திற்கு மட்டுமின்றி சுற்றியுள்ள பிற மாநிலங்களுக்கும் இவை பயனளிக்கும் என்று பிரதமர் கூறினார்.
நேற்று நான் வடகிழக்குப் பயணத்தின் புகைப்படங்களைப் பகிருமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டேன். ஒரு சில நொடிகளில் வெளிநாட்டுக்காரர்கள் உட்பட பல்வேறு மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டனர். இன்று நான் துவக்கி வைத்த திட்டங்கள், எளிதான வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமின்றி, சுற்றுலாவையும், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்று கூறினார்.

அருணாச்சலப்பிரதேசத்தில் 50 ஆரோக்கிய மற்றும் நல வாழ்வு மையங்களை பிரதமர் துவக்கி வைத்தார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாங்கள் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு மையங்களை உருவாக்கி வருகிறோம். இந்த மையங்கள் மூலம் சுகாதார சேவைகள் அதிகரிக்கும். பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 150 நாட்களுக்குள் 11 லட்சம் ஏழை மக்கள் பயன் பெற்றுள்ளனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது போல விவசாய வெகுமதி திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளில் 3 தவணை முறையில் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.6 ஆயிரம் செலுத்தப்படும். அருணாச்சலப்பிரதேச அரசின் சுற்றுச்சூழலுக்கேற்ற விவசாயத்தைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் தனது அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இட்டா நகரில் உள்ள ஐ.ஜி. பூங்காவில் அருணாச்சலப்பிரதேசத்திற்கான பிரத்யேக தூர்தர்ஷன் தொலைக்காட்சியான அருண் பிரபாவை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இது தூர்தர்ஷன் இயக்கும் 24-வது தொலைக்காட்சியாகும். இந்த தொலைக்காட்சியின் மூலம் மாநிலத்தின் தொலைத் தூரத்தில் உள்ள மக்களையும் செய்திகள் சென்றடையும். இந்நிகழ்ச்சியில் அருணாச்சலப் பிரதேசத்தின் ஜோடேயில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிரந்தர வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

“அருணாச்சலப்பிரதேசம் இந்தியாவின் பெருமை. இது இந்தியாவின் நுழைவாயில். நாங்கள் இந்த மாநிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமின்றி, வளர்ச்சியின் விரைவு பாதையிலும் கொண்டு செல்வோம் என்று கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

*****