பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2015ஆம் ஆண்டிற்கான இந்திய ஆட்சிப் பணி பயிற்சியாளர்கள் 181பேருடன் இன்று கலந்துரையாடினார்.
முடிவுகளை எடுக்கும்போது, பரம ஏழைகளின் நலனையே எப்போது நினைவில் கொள்ள வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் காப்புறுதியை அவர்கள் நினைவு கூர வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இந்தப் பயிற்சியாளர்களில் பலரும் இந்திய ஆட்சிப் பணியில் சேருவதற்கு முன்பு தனியார் துறையில் பணியாற்றியுள்ளதை சுட்டிக் காட்டிய பிரதமர், இதற்கு முன்பு அவர்கள் செய்தது ‘வேலை’ என்றால், இனி அவர்கள் செய்யவிருப்பது ‘சேவை’ என்பதையும் சுட்டிக் காட்டினார்.
வடகிழக்குப் பகுதியின் முன்னேற்றம், அதனுடன் தொடர்பு கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டிய பிரதமர், வடகிழக்குப் பகுதி வளர்ச்சி பெற்றதாக மாறியதெனில், நாடு முழுவதுமே முன்னேறிச் செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டார்.
பயிற்சியாளர்களின் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தான் விரிவாகப் பயணம் செய்ததும், ஒரு மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியதும் ஆகிய அனுபவங்கள்தான் இன்று தனது பிரதமர் பணியை சிறப்பாக நிறைவேற்ற உதவி செய்கிறது என்றும் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டார்.