Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மையமாக அசாம் மாற்றப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு  மையமாக அசாம் மாற்றப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு  மையமாக அசாம் மாற்றப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு  மையமாக அசாம் மாற்றப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.


வடகிழக்கு மாநிலங்களின்  பண்பாடு, ஆதார வளங்கள் மற்றும்  மொழிகளைப் பாதுகாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதி: பிரதமர்

 

அருணாசலப்பிரதேசம், அசாம், திரிபுரா மாநிலங்களுக்கான  பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் கவுஹாத்திக்கு வருகை தந்தார். வடகிழக்கு எரிவாயுக் கட்டமைப்புக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.   மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் துவக்கி வைத்தார்.

     அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “வடகிழக்கு பிராந்தியத்தின் வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது. இந்தப் பிராந்தியத்தின் விரைவான வளர்ச்சிதான் எனது அரசின் முன்னுரிமையாகும்” என்று கூறினார். அசாம் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாகக் கூறிய அவர், இடைக்கால நிதிநிலை அறிக்கையில், வடகிழக்குப் பிராந்தியத்திற்கான நிதி ஒதுக்கீடு 21 விழுக்காடுக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது வடகிழக்குப் பிராந்தியத்தின் மீதான தமது அர்ப்பணிப்புக்கு சான்றாகும் என்று குறிப்பிட்டார்.

     வடகிழக்கு மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு, தமது அரசு முனைப்புடன் பாடுபட்டு வருவதாக கூறிய பிரதமர், இம்மாநிலங்களின் பண்பாடு, ஆதார வளங்கள் மற்றும் மொழிகள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தார். குடியுரிமை மசோதா தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்று பிரதமர் மக்களிடம் வலியுறுத்தினார். 36 வருடங்கள் கடந்த பிறகும், அசாம் பிரகடனம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், மோடி தலைமையிலான அரசு மட்டும்தான் இதை நிறைவேற்றியிருப்பதாக அவர் கூறினார்.  அரசியல் லாபத்திற்காகவும், வாக்கு வங்கிக்காகவும், அசாம் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதை நிறுத்துங்கள் என்று அரசியல் கட்சிகளிடம் அவர் வலியுறுத்தினார். குடியுரிமை (திருத்த) மசோதாவினால் அவர்களது மாநிலம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று வடகிழக்கு மக்களிடம் பிரதமர் உறுதி அளித்தார். அசாம் பிரகடனம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

     ஊழலைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், “காவலர்” ஊழலைக் கண்டுபிடித்து வருவதாகவும், முந்தைய அரசு  ஊழலை இயல்பான ஒன்றான மாற்றியது என்றும், தனது அரசு அதை பூண்டோடு வேரறுப்பதாகவும்  கூறினார்.

     வடகிழக்கு எரி்வாயுக் கட்டமைப்பிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தப் பிராந்தியம் முழுவதும் இயற்கை எரிவாயு தடையின்றிக் கிடைப்பதை இது உறுதி செய்யும். இந்தப் பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். தின்சுக்கியாவில்  ஹல்லாங் மாடுலர் எரிவாயு செயல்முறை கூடத்தை பிரதமர் திறந்து வைத்தார். அசாமில் உற்பத்தியாகும் மொத்த எரிவாயுவில் 15 விழுக்காடு இதன் வாயிலாக விநியோகிக்கப்படும். வடக்கு கவுஹாத்தியில் எல் பி ஜி திறன் மேம்பாட்டு சேமிப்புக் கலனையும் பிரதமர் திறந்து வைத்தார்.

   பிரதமர்,     நுமளிகரில் என்.ஆர்.எல். உயிரி சுத்திகரிப்பு நிலையத்திற்கான  அடிக்கல் நாட்டினார். இதன் மூலம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம் மாநிலங்கள் வழியாக, 729 கிலோ மீட்டர் நீளமுள்ள எரிவாயுக்குழாய் பரவுனியிலிருந்து கவுஹாத்தி வரை அமைக்கப்பட உள்ளது.

     நாடெங்கும் கட்டப்பட உள்ள 12 உயிரி சுத்திகரிப்பு நிலையங்களில் நுமள்கர் தான் மிகப் பெரியது என்று தெரிவித்த பிரதமர், இந்த வசதிகள்,  அசாமை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மையமாக மாற்றியமைத்து, இந்தியப் பொருளாதாரத்திற்கும் உத்வேகம் அளிக்கும் என்று கூறினார். பத்து விழுக்காடு வரை எத்தனாலை கலப்பது பற்றிய அரசின் திட்டங்களையும் அவர் விவரித்தார்.

     காமரூப், கச்சார், ஹைலாகண்டி, கரீம்கஞ்ச் மாவட்டங்களுக்கான நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை அமைப்பதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 2014-ல் 25 லட்சமாக இருந்த எரி்வாயு இணைப்புகள், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 46 லட்சமாக அதிகரித்துள்ளன என்றும் எரிவாயு நிரப்பும் நிலையங்களின் எண்ணி்க்கை இதே காலத்தில் 950-லிருந்து 1500-ஆக கூடியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

     பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் ஆறுவழிப் பாதைக்கான பாலத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்த பாலத்தால் இரு கரைகளுக்கும் இடையேயான பயண நேரம், ஒன்றரை மணியிலிருந்து 15 நிமிடமாகக் குறைக்கப்படும் என்று  தகவல் தெரிவித்தார்.

     கோபிநாத் பர்தோலோய், பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு தனது அரசு பாரத ரத்னா விருது அளித்திருப்பது குறித்து பெருமைப்படுவதாக பிரதமர் கூறினார்.