பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று கொல்கத்தாவில் கவுடியா இயக்கம், மடம் ஆகியவற்றின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தினை முறைப்படித் துவக்கி வைத்தார்.
இத்தருணத்தில் உரையாற்றிய பிரதமர் நீண்ட நாட்களாக இந்தியாவில் நிலைத்திருக்கும் நாகரீக குணங்களுக்கு இந்தியாவின் ஆன்மிக ரீதியான உணர்வே காரணம் என்று குறிப்பிட்டார். காலம் காலமாகவே இந்த ஆன்மிக ரீதியான உணர்வு என்பது நீடித்து வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த உணர்வானது மொழிகளையெல்லாம் கடந்த ஒன்று எனவும் பிரதமர் குறிப்பிட்டார். புகழ்பெற்ற பக்திப் பாடலான “வைஷ்ணவ ஜன் தோ தேனே ரே கஹியே ரே” இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நவீன காலத்தில் “வைஷ்ணவ ஜன்” என்ற சொல்லுக்கு பதிலாக “மக்கள் பிரதிநிதிகள்” (ஜன் பிரதிநிதிகள்) என்ற சொல்லை மிக எளிதாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் பேசுகையில், இந்திய சமூகத்தில் சீர்திருத்தம் என்பது எப்போதுமே உள்ளிருந்தே வந்துள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், ராஜாராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் போன்றோரை இதற்கு மிகச்சிறந்த உதாரணங்களாகக் கூறலாம் என்றும் சுட்டிக் காட்டினார்.
பின்னர், பிரதமர் கவுடியா மடத்தில் நடைபெற்ற பூஜையிலும் கலந்து கொண்டார்.
Sharing my speech at the Gaudiya Mission and Math. https://t.co/Prt1L0xTwQ
— Narendra Modi (@narendramodi) February 21, 2016