பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை சத்திஸ்கர் மாநிலத்தின் நயா ராய்ப்பூரில் பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டித் தொடங்கி வைப்பார்.
சத்திஸ்கர் மாநிலத்தின் ராஜ்நந்த்காவுன் மாவட்டத்தில் உள்ள குருபாட் என்ற இடத்தில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் இயக்கத்தையும் பிரதமர் துவக்கி வைக்க உள்ளார். இந்தியாவில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனைத்திலும் கிராமப்புற வளர்ச்சிக்கான தொகுப்பு மையங்களை வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டதே இந்த இயக்கமாகும். அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தூண்டிவிடுவதாக இந்த இயக்கம் இருக்கும். பொருளாதார நடவடிக்கைகள், திறன் வளர்க்கும் பயிற்சிகள், உள்ளூரில் நிறுவன திறனை மேம்படுத்துவது, கட்டமைப்பு வசதிகளை வழங்குவது ஆகியவற்றின் மூலம் இந்த தொகுப்பு மையங்கள் வளர்த்தெடுக்கப்படும்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் ஒடிசா மாநிலத்தின் பர்கார் என்ற இடத்தில் ஒரு பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ளவிருக்கிறார்.
பிரதமர் நாளை மாலை கொல்கத்தாவில் கவுடியா இயக்கம், மடம் ஆகியவற்றின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் துவக்க விழாவிலும் பங்கேற்கவிருக்கிறார்.
Will visit Chhattisgarh, Odisha &West Bengal tomorrow. In Chhattisgarh will lay foundation stone for houses to be built under PM Awas Yojana
— Narendra Modi (@narendramodi) February 20, 2016
Will launch Shyama Prasad Mukherji Rurban Mission, which will equip our villages with best infra & make them centres of economic growth.
— Narendra Modi (@narendramodi) February 20, 2016
In Odisha will address a public meeting in Bargarh & in WB I will attend inauguration of Centenary Celebration of Gaudiya Mission & Math.
— Narendra Modi (@narendramodi) February 20, 2016