Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வங்காளதேச வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

வங்காளதேச வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

வங்காளதேச வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு


வங்காள தேசத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் மேதகு டாக்டர் ஏ.கே. அப்துல் மோமென், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

டாக்டர் அப்துல் மோமென் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு, வாழ்த்து தெரிவித்த பிரதமர், தனது முதல் வெளிநாடுப் பயணத்திற்கு இந்தியாவை தேர்வு செய்ததற்குப் பாராட்டு தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து டாக்டர் அப்துல் மோமென் பிரதமரிடம் விளக்கினார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-வங்காள தேசத்தின் உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். வங்காள தேச பிரதமராக ஷேக் ஹசீனா அரசு பொறுப்பேற்றுள்ள இந்நேரத்தில், இந்தியா – வங்காள தேசத்தின் நல்லுறவு தொடர்ந்து நீடிக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.