Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நினைவுச் சின்னங்கள் மூலம் தேசிய பெருமை உணர்வை உருவாக்குதல்


“ஒன்றுபட்ட பாரதம் – ஒப்பற்ற பாரதம்” திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2016 அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி வைத்தபோது கூறினார், “சர்தார் பட்டேல் நமக்கு அளித்தது ஒன்றுபட்ட பாரதம். இப்போது 125 கோடி இந்தியர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒப்பற்ற பாரதத்தை உருவாக்க வேண்டிய உயரிய கடமை உள்ளது” என்று கூறினார். இந்த கருத்துதான் திரு. நரேந்திர மோடி இந்தியப் பிரதமர் ஆவதற்கு முன்னதாகவே அவரை வழிநடத்தியது.

தேசியத் தலைவர்களை கௌரவிப்பதில் திரு. நரேந்திர மோடி பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தார். நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் மேம்பாட்டுக்காக தியாகம் செய்தவர்களை கௌரவிக்க அவர் விரும்பினார். நமது வரலாறும், பாரம்பரியமும் நமது தேசிய பெருமித உணர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

தண்டியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய உப்பு சத்தியாக்கிரக நினைவிடம் அதற்கு ஒரு உதாரணம். இந்த நினைவிடம், 1930-ல் மகாத்மா காந்தி தலைமையில் அவரைப் பின்பற்றி சென்ற 80 சத்தியாக்கிரகிகளின் தண்டி யாத்திரையை கௌரவித்து நினைவுகூர்கிறது.

சர்தார் வல்லபாய் பட்டேலின் 182 மீட்டர் உயர ஒற்றுமை சிலை இந்தக் கருத்துக்கு மேலும் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இன்றைய நிலையில், உலகின் மிக உயரமான சிலையான இதை திரு. நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது திட்டமிட்டார். இந்தச் சிலை இந்தியாவின் இரும்பு மனிதருக்கு, இந்தியாவை ஒற்றுமைப்படுத்திய மாமனிதருக்கு அர்ப்பணிக்கப்பட்டது மட்டுமன்றி, அனைத்து இந்தியர்களின் ஆழமான பெருமித உணர்வுக்கும் நினைவுச் சின்னமாகும்.

பல்லாண்டுகளாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தினர், அவரது வாழ்க்கை தொடர்பான கோப்புகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வந்தனர். இதில் உறுதியான முடிவெடுக்க அடுத்தடுத்து வந்த அரசுகள் மறுத்துவிட்டன. 2015-அக்டோபரில் திரு. நரேந்திர மோடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தினரை தமது இல்லத்திற்கு வரவழைத்து கௌரவித்தபோது, “வரலாற்றின் குரல்வலையை நெறிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை” என்று கூறினார். வரலாற்றை மறந்தவர்கள், வரலாறு படைப்பதற்கான ஆற்றலையும் இழக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். இதனையடுத்து, நேதாஜி சம்பந்தப்பட்ட கோப்புகள் ரகசிய வகையிலிருந்து விடுவிக்கப்பட்டு, டிஜிட்டல் மேடையில் வெளியிடப்பட்டன.

1940-களின் மத்தியில், செங்கோட்டையில் இந்திய தேசிய ராணுவத்தின் நடவடிக்கைகள் தேசத்தையே உலுக்கின. எனினும், இந்த நடவடிக்கைகள் நடந்த கட்டிடம் பல்லாண்டுகளாக செங்கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தது. இந்த ஆண்டு சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளின் போது, பிரதமர் அதே கட்டிடத்தில் அருங்காட்சியகம் அமைத்து அதனை நேதாஜிக்கும், அவரது இந்திய தேசிய ராணுவத்திற்கும் அர்ப்பணித்தார். இந்த அருங்காட்சியகம், நான்கு அருங்காட்சியகங்களைக் கொண்ட வளாகமாக “கிரந்தி மந்திர்” என்ற தொகுப்புப் பெயருடன் விளங்குகிறது. 1857 சுதந்திரப் போருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பந்தப்பட்ட அருங்காட்சியகம் ஆகியனவும் இந்த வளாகத்தின் பகுதிகளாக அமைந்துள்ளன.

பேரிடர் உதவி நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை பணியாளர்களை கௌரவிப்பதற்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பெயரில் விருதுகளையும் திரு. நரேந்திர மோடி அறிவித்தார்.

கடந்த நான்காண்டுகளில் மேலும் பல நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. இவற்றின் மூலம் நமது வரலாற்றின் பெரிய தலைவர்கள் பலரின் பங்களிப்பு நினைவுகூரப்பட்டது.

திரு. நரேந்திர மோடியின் முக்கிய கருத்துகளில் ஒன்று, பஞ்சதீர்த்தம் – அதாவது, பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐந்து நினைவிடங்கள். இவற்றில் அவரது பிறந்த இடமான மோ, லண்டனில் அவர் படித்த காலத்தில் தங்கியிருந்த இடம், நாக்பூரில் திக்ஷா பூமி, தில்லியில் மகாபரிநிர்வான் ஸ்தல், மும்பையில் சைத்திய பூமி ஆகியன அடங்கும்.

அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, கட்ச் நகரில் சியாம்ஜி கிருஷ்ணா வர்மாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவிடத்தை தொடங்கி வைத்தார்.
ஹரியானாவின் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதியான சர் சோட்டுராம் சிலையை அவர் திறந்து வைத்தார்.

அரபிக் கடலில் மும்பை கடலோரப் பகுதியின் சிவாஜி நினைவிடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

தில்லியில் தேசிய அறிவியல் மையத்தில் சர்தார் பட்டேல் அரங்கு ஒன்றை பிரதமர் திறந்து வைத்தார்.

சமீபத்தில் அவர் தேசியக் காவல் நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதன்மூலம் தேச சேவையின்போது இன்னுயிரை ஈந்த 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை பணியாளர்களின் வீரத்திற்கும் உயிர்த் தியாகத்திற்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இன்னும் சில வாரங்களில் தேசிய போர் நினைவுச் சின்னம் திறந்துவைக்கப்பட உள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற போர்களிலும், ராணுவ நடவடிக்கைகளிலும் உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் நினைவுக்கு அர்ப்பணித்து வைக்கப்படும்.

நினைவிடங்கள் என்பவை தியாகங்களை நினைவுபடுத்துபவை: நாம் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு பங்களித்தவர்களை நினைவுபடுத்துபவை: இப்போதைய மற்றும் எதிர்காலத்தைய சந்ததியினருக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரங்கள்.

திரு. நரேந்திர மோடி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த நினைவிடங்கள் தேசியத்தின் அடையாளச் சின்னங்களாக உள்ளன. மக்களிடையே ஒருமைப்பாட்டையும், பெருமித உணர்வையும் ஏற்படுத்துகின்றன. இவற்றை நாம் என்றென்றும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

*****
விகீ/சிஜே/மாகசா