Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்சாட் பூங்கா முதல் அட்டா காஸியாபாத்தின் புதிய பேருந்து முனையம் வரை தில்லி மெட்ரோ நீட்டிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்


தில்சாட் பூங்கா முதல் அட்டா காஸியாபாத்தின் புதிய பேருந்து முனையம் வரை தில்லி மெட்ரோ மார்க்கத்தை நீட்டிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீட்டிக்கப்படவுள்ள ரயில் பாதையின் தூரம் 9.41 கிலோமீட்டர் ஆகும். இத்திட்டத்திற்காக மத்திய நிதியுதவியாக ரூபாய் 324.87 கோடி வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒட்டுமொத்த செலவு ரூ.1,781.21 கோடியாகும்.

இத்திட்ட அமலாக்கம் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும்.
தில்லி மெட்ரோ ரயில் கழகமும், தில்லி யூனியன் பிரதேச அரசும் இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளன.

***