Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மொராக்கோ நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் திருமிகு. ராகியா எட்டர்ஹாம் பிரதமருடன் சந்திப்பு


மொராக்கோ நாட்டின் தொழில்துறை, முதலீடு, வர்த்தகம் மற்றும் இணைய பொருளாதாரத் துறையின் வெளியுறவு அமைச்சர் திருமிகு. ராகியா எட்டர்ஹாம் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

மொராக்கோ நாட்டு அரசரின் வாழ்த்துச் செய்தியை திருமிகு. ராககியா எட்டர்ஹாம் பிரதமரிடம் தெரிவித்தார். அரசருடனான தனது முந்தைய சந்திப்பினை நினைவு கூர்ந்த பிரதமர், அரசரின் நல்வாழ்விற்கும், மொரோக்கோ நாட்டு மக்களுக்கு அமைதியும் வளமும் பெருகவும் வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவில் குறிப்பாக சட்ட உதவி, இணைய பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளில் உள்ள உறவில் பெரும் முன்னேற்றம் அடைந்து வருவதை திருமிகு. ராகியா எட்டர்ஹாம் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க உறவினை பாராட்டிய பிரதமர், இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் துறைகளிலும் குஜராத் மாநிலத்துடன் மொராக்கோ நாட்டின் வர்த்தக மற்றும் முதலீடு உறவினையும் மேலும் வலுபடுத்தவும் எடுக்கப்படும் முயற்சிகளை வரவேற்றார்.