Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தத்துக் சேரி அன்வர் இப்ராஹிம் பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் சந்திப்பு

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பர்தி கெடிலன் ராக்யாத் கட்சித் தலைவர் திரு.தத்துக் சேரி அன்வர் இப்ராஹிம் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பில் திரு. இப்ராஹிமுடன் மலேசிய நாடாளுமன்றஉறுப்பினர்கள் திரு. கேசவன் சுப்பிரமணியன் மற்றும் திரு. சந்தாரா குமார் ராம நாயுடு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சமீபத்திய தேர்தலில் பி.கே.ஆர். கட்சியின் தலைவராக திரு. இப்ராஹிம் தேர்வு செய்யப்பட்டதற்குப் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். மே 2018-ல் மலேசியாவில் அவர்கள் சந்தித்த தருணத்தை பிரதமர் நினைவுக் கூர்ந்தார். மலேசிய பிரதமர் திரு.துன் டாக்டர் மஹத்திர் முகமத்துக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

இரு நாட்டு உறவு, மண்டல மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.