மகாத்மா காந்தியின் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில்நிலைய சம்பவத்தின் 125-வது ஆண்டு மற்றும் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நூற்றாண்டை நினைவு கூரும் வகையில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இணைந்து அஞ்சல் தலைகள் வெளியிட்டது குறித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது. கூட்டு அஞ்சல்தலை வெளியீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதியன்று கையெழுத்தானது.
இந்த ஆண்டு ஜூலை 26ந் தேதியன்று வெளியிடப்பட்ட இந்த அஞ்சல்தலைகளில் மகாத்மா காந்தியின் உருவமும், நெல்சன் மண்டேலா உருவமும் இடம் பெற்றிருந்தன.
விகீ