Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அடிப்படை மற்றும் கண்டுபிடிப்பு ஆராய்ச்சிக்கான ஒருங்கிணைந்த போட்டிக்கான மானிய ஒத்துழைப்புக்கு இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே உடன்பாடு


2015 ம் ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்தான உடன்பாடு ஒன்று பற்றி பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. இந்த உடன்பாட்டின் படி அடிப்படை மற்றும் கண்டுபிடிப்பு அறிவியலில் ஆராய்ச்சித் திட்டங்களைக் கூட்டாகச் செயல்படுத்துவதில் இந்தியா மற்றும் ரஷ்யா ஆராய்ச்சியாளர்களிடையே போட்டிகளுக்கான ஆராய்ச்சி மானியத்திற்கு வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 6 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக் கூடியது. இந்திய அறிவியல் தொழில்நுட்ப துறைக்கும் ரஷ்யாவின் அறிவியல் கூட்டமைப்புக்கும் இடையே பரஸ்பர சம்மத்தித்ன பேரில் இதை விரிவாக்கிக் கொள்ள இயலும்.

கணிதம், கணிணி மற்றும் கணிணி அறிவியல், இயற்பியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானம், வேதியியல் மற்றும் பொருட்கள் அறிவியல், உயிரியல் மற்றும் உயிர் அறிவியல் மற்றும் மருத்துவம், வேளாண் அறிவியல், புவி அறிவியல், பொறியியல் விஞ்ஞானம் போன்றவற்றில் அடிப்படை ஆராய்ச்சி ஆகிய துறைகளில் போட்டிகள் நடத்தப்படும். இவற்றிலிருந்து ஆராய்ச்சித் திட்டங்களை அடையாளம் காண்பதற்கான முடிவுகளை இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையும் ரஷ்ய அறிவியல் இணையமும் கூட்டாக எடுக்கும். இந்த ஒத்துழைப்பின் விளைவாக புதிய அறிவு, கூட்டு அறிவியல் வெளியீடுகள், மனித ஆற்றல் பயிற்சி, அறிவு சார் சொத்து உற்பத்தி ஆகியவை கூட்டாக ஏற்படுத்தப்படும்.

*****