பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மின் துறை அமைச்சகத்தின் மின் கட்டணக் கொள்கையில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்தது. முதன் முறையாக, மின் துறை குறித்து முழுமையான பார்வையுடன், 2006 மின் கட்டணக் கொள்கைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ன. உஜ்வல் மின் பகிர்மான உறுதித் திட்டத்தின் அடிப்படையில் அனைவருக்கும் மின்சாரம், நியாயமான கட்டணத்தில் தரமான சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்போடு கூடிய எதிர்காலம், மற்றும் தொழில் தொடங்க ஏதுவான சூழல் மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் வருமாறு :
மின்சாரம் :
அனைவருக்கும் 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் மின்சாரம் மாநில அரசுகள் மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களோடு சேர்ந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன.
மைக்ரோ கிரிட்டுகள் மூலமாக தொலை தூர கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. கிரிட் இணைப்பு முழுமையடைகையில், மின்சாரம் வாங்க வகை செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி சுரங்கங்கள் அருகே வசிப்பவர்களுக்கு, நிலக்கரி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம்
திறன் :
தற்போது உள்ள மின் நிலையங்களை விரிவாக்குவதன் மூலமாக மின் கட்டணத்தை குறைப்பது.
தேவை ஏற்படாத மின்சாரத்தை விற்பனை செய்து, அதன் பலனை பகிர்ந்து கொள்வதன் மூலமாக, ஒட்டுமொத்த மின் கட்டணத்தை குறைப்பது.
மின் பகிர்மாணத் திட்டங்களை வெளிப்படையான ஏலத்தினால் நிறைவேற்றுவதன் மூலும் திட்டங்கள் குறைந்த செலவில் விரைந்து முடிக்கப்பட வாய்ப்பு.
நவீன மீட்டர்களை பொருத்தி, மின் திருட்டை குறைத்து, நெட் மீட்டரிங்குக்கு ஏற்பாடு செய்தல்.
இந்தியா முழுக்க உள்ள மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள ஏற்பாடுகள் செய்து, அதன் மூலம் மின் கட்டணத்தை குறைப்பது.
சுற்றுச்சூழல் :
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கடமை : எரிசக்தி பாதுகாப்பையும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியையும் வளர்ப்பதற்காக, நீர் மின்சாரம் இல்லாமல், உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில் 8 சதவிகிதம் மார்ச் 2022 அன்று உள்ளபடி சூரிய ஒளி மின்சாரமாக இருக்க வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி : புதிய நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையங்கள், குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி / வாங்க வேண்டும்
மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்கள் காலாவதியான மின் நிலையங்களின் மின்சாரத்தையும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தையும் இணைத்து, விலை குறைந்த மின்சாரம் வழங்குதல்.
எளிதாக தொழில் தொடங்க வசதிகள் :
நிலக்கரி அதிகம் உள்ள மாநிலங்களான ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மற்றும் சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் வேலை வாய்ப்பை அதிகரித்தல். ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டணங்களில் மின் பகிர்மான நிலையங்கள் 35 சதவிகித மின்சாரம் வாங்கும் வகையில் மாநிலங்கள் மின் நிலையங்களை தொடங்க அனுமதி.
சந்தையில் நிலையில்லாத தன்மையை நீக்கும் வகையில், டெண்டர்களுக்கு உள்ளூர் வரிகள், போன்ற இதர வரிகளில் மாற்றம் செய்வது.
பல மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்வதில் உள்ள விலை நிர்ணயத்தில் தெளிவு உண்டாக்குதல். 10 சதவிகிதத்துக்கும் அதிகமான மின்சாரம் வெளி மாநிலத்துக்கு விற்பனை செய்யும் இடங்களில் மத்திய ஒழுங்குமுறை ஆணையம் விலை நிர்ணயம் செய்வது.
இந்தத் திருத்தங்கள் நுகர்வோருக்கு பல வழிகளில் பயனளிக்கும். மின்சார கட்டணத்தை குறைக்கும் அதே வேளையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஒரு உத்வேகத்தை அளித்து, பாதுகாப்பான் சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும். ஸ்வச் பாரத் மற்றும் நமாமி கங்கை திட்டங்களின்படி, குப்பைகளில் இருந்து மின்சாரம், கழிவுநீரை சுத்திகரித்து மறுபயன்பாடு செய்தல் ஆகியவற்றில் ஈடுபடுவதால், நல்ல நீர் குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் கிடைக்கும்.
இந்த திருத்தங்கள், நுகர்வோருக்கு நியாயமான விலையில் மின்சாரம் கிடைப்பதற்கும், தொழில் தொடங்கி நடத்துவதை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், முதலீட்டை அதிகரிக்கவும், கட்டண ஒழுங்குமுறைகளை ஸ்திரமாக்கவும் உதவும். மேலும் மின் உற்பத்தியில் போட்டியை அதிகரித்து மின் உற்பத்தியில் தரத்தை அதிகரிக்கும். மின்கட்டண கொள்கையில் செய்யப்பட்டுள்ள இந்த ஒட்டுமொத்த திருத்தங்கள், உஜ்வல் மின்பகிர்மான உறுதித் திட்டத்தோடு (உதய்) இணைந்து, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் கனவான அனைவருக்கும் 24 மணி நேர மின்சாரம் என்ற இலக்கை அடைய உதவும்.
Cabinet approves amendments in Power Tariff Policy to ensure 24X7 affordable Power for all. https://t.co/QYJl6xDAWe
— PMO India (@PMOIndia) January 20, 2016