Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய அமைச்சர் திரு. அனந்த் குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


மத்திய அமைச்சர் திரு. அனந்த் குமார் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமது மதிப்பிற்குரிய சகாவும், நண்பருமான மத்திய அமைச்சர் திரு. அனந்த் குமாரின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த துயரமடைந்துள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட முக்கியத் தலைவரான அனந்த் குமார், சமூகப் பணிகளில் பரிவுடன் அயராது ஈடுபட்டு வந்தவர் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் ஆற்றிய நற்பணிகளுக்காக என்றைக்கும் நினைவுகூறத்தக்கவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனந்த் குமார் மறைவு பற்றிய தகவல் அறிந்ததும், அவரது மனைவி டாக்டர் தேஜஸ்விணியை தொடர்பு கொண்டு, தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததாகவும் பிரதமர் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மிகுந்த துயரமடைந்துள்ள இந்த வேளையில், அவர்களுக்கு தமது ஆதரவு என்றும் உண்டு என்றும், அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

********