Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மதன்லால் குரானா மறைவுக்கு பிரதமர் இரங்கல்


தில்லி முன்னாள் முதலமைச்சர் திரு மதன்லால் குரானா மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

“திரு. மதன்லால் குரானா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவர், தில்லியின் வளர்ச்சிக்கு, குறிப்பாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அயராது பாடுபட்டார். கடுமையாக உழைக்கக் கூடியவரான அவர், தில்லி அரசிலும், மத்திய அரசிலும் அங்கம் வகித்த போது மக்களுக்கு ஏற்ற நிர்வாகியாகவும் செயல்பட்டவர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் பி.ஜே.பி-யை வலுப்படுத்துவதில் திரு. மதன்லால் குரானா செயல்பட்ட விதம், என்றைக்கும் நினைவுகூறத்தக்கதாகும். தேசப்பிரிவினைக்குப் பிறகு, தில்லியில் தங்கிய அகதிகளின் முன்னேற்றத்திற்காக, அவர் பல்வேறு முயற்சிகளை தயக்கமின்றி மேற்கொண்டார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

***