Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சூரிய ஒளி மின்சக்தி தொடர்பாக இந்தியா ஜெர்மனி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, அக்டோபர் 2015ல் இந்தியா ஜெர்மனி இடையே சூரிய ஒளி மின்சக்தி தொடர்பாகவும், சூரிய ஒளி மின்சக்தித் துறையில் இரு தரப்பு கூட்டுறவை மேம்படுத்தவும், இந்தியாவில் சூரிய ஒளியை பயன்படுத்துவதில் தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்புக்காகவும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு, ஏற்பளித்தது

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர கூட்டுறவை மேம்படுத்த உதவும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஜெர்மனி அடுத்த ஐந்தாண்டுகளில் க்ரெடிட்டான்ஸ்டால்ட் ஃபர் விடெர்பா (கேஎப்டபிள்யு) மூலமாக ஒரு பில்லியன் யூரோக்களை வழங்கும். கேஎப்டபிள்யு வின் நிதி சூரிய ஒளி மின் சக்தியை பயன்படுத்துபவர்களுக்கும், வங்கிகளின் மூலமாக வழங்கப்படும்.

1) இந்த ஒப்பந்தம் மாடியில் அமையும் சூரிய ஒளி மின்சக்தி தொடர்பான கூட்டுறவை மேம்படுத்தும்.

2) இந்த ஒப்பந்தம் சூரிய ஒளி பூங்காக்களையும், சூரிய ஒளி மண்டலங்களையும், (இந்திய ஜெர்மானிய நிதி கூட்டுறவின் அடிப்படையில், கேஎப்டபிள்யு நிதி உதவி அளித்து கட்டப்படும் பசுமை எரிசக்தி பாதைக்கு அருகாமையில், இது முடிந்தால் உருவாக்கப்படும்)

3) சுத்தமான மற்றும் நிலையான எரிசக்தி பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக, சூரிய ஒளி மின் திட்டங்களை உருவாக்குதல்.

***