பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ஆப்கானிஸ்தானில் கட்டப்பட்டு வரும் சல்மா அணைக்கான மறு செலவு மதிப்பீடாக ரூபாய் 1775.69 கோடிக்கு ஒப்புதல் அளித்தது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் WAPCOS என்ற பொதுத்துறை நிறுவனம், ஜுன் 2016க்குள் இந்த அணையை கட்டி முடிக்கும்.
இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்கப்பட்டு அதனால் கிடைக்கும் மின்சாரமும், நீரும், மேற்கு ஆப்கானிஸ்தானை செழுமையடையச் செய்து, பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையச் செய்து, இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும். மேற்கு ஆப்கானிஸ்தானின் நீர்பாசன தேவைகளையும், மின்சாரத் தேவைகளையும், இந்த திட்டம் நிறைவேற்றும்.
இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர் இடையேயான வேறுபாடுகள், திட்ட காலம் நீட்டிக்கப்பட்டதால் ஆலோசனை நிறுவனத்துக்கு ஆகும் கூடுதல் செலவு, ஆப்கானிஸ்தான் ஊழியர்களை பயிற்றுவிக்க ஆகும் செலவு போன்றவை திட்டச் செலவுகளை மறு மதிப்பீடு செய்ய வைத்துள்ளன.
பின்னணி :
ஹெராட் பிராந்தியத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள ஹரி ருட் நதியில் அமைந்துள்ள சல்மா அணை, 10.75 மீட்டர் உயரத்துக்கு மண்ணாலும், பாறைகளாலும் கட்டப்பட்டுள்ளது. தலா 14 மெகா வாட் திறனுள்ள மூன்று யூனிட்டுகளை கொண்ட 42 மெகாவாட் நீர் மின் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 75,000 ஹெக்டேர் நிலத்துக்கு பாசனம் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்கப்பட்டு அதனால் கிடைக்கும் மின்சாரமும், நீரும், மேற்கு ஆப்கானிஸ்தானை செழுமையடையச் செய்து, பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையச் செய்து, இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும்.