Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டெஸ்டிநேஷன் உத்ராகண்ட் முதலீட்டாளர்கள் 2018 உச்சிமாநாட்டில் பிரதமர் உரை


டெராடூனில் இன்று நடைபெற்ற டெஸ்டிநேஷன் உத்ராகண்ட் முதலீட்டாளர்கள் 2018 உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அதிவேகமான மாற்றம் ஏற்பட்டு வரும் காலத்தில் இந்தியா உள்ளது. வரும்காலங்களில் உலக வளர்ச்சியில் இந்திய முக்கிய பங்கு வகிக்கும் என்ற கருத்து பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உள்ளது என்று பிரதமர் கூறினார். இத்தகைய பின்னணியில், சுலபமாக தொழில் செய்யும் பட்டியலில், இந்தியா 42 இடங்கள் முன்னேறியுள்ளது என்று பிரதமர் கூறினார். வரி விதிப்பு முறையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் அவர் பேசினார். வராக்கடன் மற்றும் திவால் சட்டம் தொழில் செய்வதை சுலபமாக்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.

மேலும் சுதந்திரத்துக்குப் பிறகு செய்யப்பட்டுள்ள பெரிய வரி மாற்றம் ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகும்; இது நாட்டை ஒற்றை சந்தையாக மாற்றி, வரிசெலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

உள்கட்டமைப்பு துறை வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறிய பிரதமர், விரைவாக நடைபெற்று வரும் சாலை அமைப்பு, ரயில்வே தடங்கள், புதிய மெட்ரோ கட்டமைப்பு, அதிவேக ரயில் திட்டங்கள் மற்றும் பிரத்யேக சரக்கு மார்க்கங்கள் கட்டுமானம் குறித்து பேசினார். விமான போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர், மக்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதி திட்டம், மின்சாரம், தூய்மையான எரிசக்தி, சுகாதாரம் மற்றும் வங்கி சேவைகள் குறித்தும் பேசினார். சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டம் 2 மற்றும் 3 அடுக்கு நகரங்களில் மருத்துவ உள்கட்டமைப்பு வளர்ச்சியை அதிகரிக்கும் என்றார்.

புதிய இந்தியா முதலீடுக்கான சிறந்த இலக்காகும், இதனைக் குறிக்கும் வகையில் “டெஸ்டிநேஷன் உத்ராகண்ட்” உள்ளது என்று கூறிய பிரதமர், மாநிலத்தில் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் எடுக்கப்பட்ட உள்ள நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். அனைத்து வானிலைகளுக்கும் உகந்த சார்-தம் சாலைத் திட்டம், ரிஷிகேஷ் – கர்ணபிரயாக் ரயில்வே திட்டம் போன்ற நிலத்தை இணைக்கும், போக்குவரத்தை மேம்படுத்தும், முன்முயற்சிகளின் வளர்ச்சி குறித்து பிரதமர் கூறினார். சுற்றுலாத் துறையில் உத்ராகண்ட் மாநிலம் கொண்டுள்ள மிகப் பெரிய வாய்ப்புகள் குறித்தும் அவர் கூறினார்.

உணவு பதப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறையில் எடுக்கப்பட்டு வரும் முன்முயற்சிகள் குறித்து பேசிய பிரதமர் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தின் சாதனைகளையும் எடுத்துரைத்தார்.