Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அருணாசலப் பிரதேசம் இட்டாநகரில் 15.02.2018 அன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

அருணாசலப் பிரதேசம் இட்டாநகரில் 15.02.2018 அன்று  பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

அருணாசலப் பிரதேசம் இட்டாநகரில் 15.02.2018 அன்று  பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

அருணாசலப் பிரதேசம் இட்டாநகரில் 15.02.2018 அன்று  பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


 

இங்கு திரளாக குழுமியுள்ள எனது சகோதரர், சகோதரிகளே,

      சூரியன் உதயமாவதை இந்திய மக்கள் பார்க்க வேண்டும் என்றால், சூரிய உதயத்தைக் காண நாட்டு மக்கள் அனைவரும் அருணாசலப் பிரதேசத்தையே எதிர்நோக்கி இருக்க வேண்டும்.

 நாட்டுமக்கள் அனைவரும் அருணாசலப் பிரதேசத்தை பார்க்காமல்  சூரிய உதயத்தை காண முடியாது.  அருணாசலப் பிரதேசத்தில் இருள் முடிந்து ஒளி பரவுகிறது. அந்த வகையில்  வரும் காலத்தில் இங்கு பிரகாசமான முன்னேற்றம் ஏற்படும் என்பது இன்று பரவும் ஒளிக்கீற்றிலிருந்து காண முடிகிறது.

       நான் அருணாசலப் பிரதேசத்திற்கு பலமுறை வருகை புரிந்துள்ளேன். ஓர் அமைப்பின் கீழ் நான் பணியாற்றிய போதும் குஜராத், முதலமைச்சராக இருந்த போதும், தற்போது பிரதமரான போதும் இங்கு வந்திருக்கிறேன். இங்கு தற்போது இரண்டாவது முறையாக வந்து உங்களை எல்லாம் சந்தித்து பேசும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.

      நாட்டுப்பற்று ஒவ்வொருவர் நரம்பிலும் ஓடுகிறது. நாட்டை நேசிப்பதும் அது போலத்தான். அருணாசலப் பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்களின் ஒவ்வொரு நரம்பிலும் நாட்டுப்பற்று இருப்பதாக உணர்ந்து ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர்.  

  வடகிழக்கில் ஏதாவது ஒரு மாநிலத்தில் அதிகமாக இந்தி மொழி பயன்படுத்தப்படுகிறது என்றால் அது, அருணாசலப் பிரதேசமாகத்தான் இருக்க முடியும்.

   இன்று நான் மூன்று நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில்  பெரிய பரிசு அருணாசலப் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

     மத்தியில் நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு புதிய கலாச்சாரத்தை தொடங்கி இருக்கிறோம். ஒரு தலைவரின் வருகைக்காக நீங்கள் காத்திருக்கக் கூடாது. பிரதமருக்காகவும் நீங்கள் காத்திருக்கக் கூடாது. புதிய வசதி ஏற்படுத்தப்பட்டால் அதனை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

     பணியாற்றும் அலுவலகம் சிறப்பாக இருந்தால் ஒரே வளாகத்தில் எல்லாப் பிரிவுகளும் அமைந்திருந்தால் கிராமத்திலிருந்து தலைமைச் செயலகத்துக்கு தமது கோரிக்கையை கொண்டு வரும் ஒருவருக்கு அதிகாரிகளை கண்டு பேசுவது எளிதாக இருக்கும். இதனால் சாமானிய மனிதருக்கும் அதிகாரிகளைக் கண்டு பேசுவது எளிதாக அமையும்.

   எல்லா மக்களும் ஒரே திசையில் ஒன்றாக பயணித்தால்தான் அரசு  நல்ல பலன்களைத் தர முடியும். எனவே எல்லா அலுவலகங்களும் ஒரே வளாகத்தில் அமையப் பெற்றால், கலந்துரையாடுவது இயற்கையாகவே அமைந்துவிடும்.

      புதிய பரிசோதனையை இந்த அரசில்  தொடங்கியிருக்கிறோம். கடந்த 70 ஆண்டுகளாக தில்லியிலிருந்துதான் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்களும் தில்லியை எதிர்பார்த்தே காத்திருந்தனர்.  நாம் ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஆட்சியின் பலன்களை கொண்டுசென்றுள்ளோம். தற்போது பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்கள் தங்கள் மூலமாகவே ஆட்சி நடப்பதாக கருதுகின்றனர்.  தற்போது ஆட்சி தில்லியிலிருந்து நடைபெறவில்லை.

      வேளாண் உச்சிமாநாட்டை சிக்கிம் மாநிலத்தில் நாங்கள் நடத்த வேண்டியிருந்தது. நாடுமுழுவதும் இருந்து அமைச்சர்களை இந்த மாநாட்டிற்கு அழைத்திருந்தோம். சிக்கிமில் இயற்கை முறையிலான விவசாயம் எப்படி நடைபெறுகிறது என்பதை நேரில் காணும்படி அவர்களைக் கேட்டிருந்தோம். இதே போல பல்வேறு மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் வடகிழக்கில் பெரிய அளவில் கூட்டங்களை நடத்த வேண்டும். வடகிழக்குக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கடைசி பிரதமர் மொரார்ஜி தேசாய்தான்.  அதன்பிறகு யாரும் பங்கேற்கவில்லை. ஆனால் நானோ உங்களுக்காகவே இங்கு வந்திருக்கிறேன்.

   அதனால்தான். வடகிழக்குக் குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டு விரிவாக விவாதம் நடத்தியிருக்கிறேன்.

   மத்திய அரசின் வடகிழக்கு பிராந்திய அமைச்சகம் தில்லியிலிருந்து கொண்டு வடகிழக்கு பகுதி சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இந்த அமைச்சகமும் செயலகமும் வடகிழக்கு பகுதிக்கு நேரில் வந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.

    இன்று இங்கே மருத்துவமனை ஒன்றுக்கும் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கும் அடிக்கல் நாட்டும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நம் நாட்டில் சுகாதாரத்துறையில், நிறைய பணிகள் ஆற்ற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.  3 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட பகுதியில் பெரிய மருத்துவமனை ஒன்றையும், மருத்துவக் கல்லூரி ஒன்றையும் உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் கனவாகும். ஒவ்வொரு கிராமத்திற்கும்  முறையான சுகாதாரச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொலைதூர பகுதிகளுக்கும், அதனைக் கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.

    உடல் நலமையங்களில் குறைந்தபட்ச வசதிகளும், பணியாளர்களும், உரிய தரத்திற்கு ஏற்ப இருப்பது அவசியம்.

    நாடு முழுவதும் நவீன முறையில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் காய்கறிச் சந்தைகளை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.  இதன் மூலம் கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் வேளாண் பொருட்களை சந்தைக்கு கொண்டுசென்று விற்பனை செய்யும் வாய்ப்பை பெறமுடியும்.

    மூவாயிரம் மருத்துவமனைகளுக்கு அருகே, மக்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ப மருந்தகங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். அதிகமாக பயன்படுத்தப்படும் கிட்டதட்ட 800 வகையான மருந்துகள் அங்கு கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

  தற்போது நாங்கள் ஏழை, எளிய மக்களுக்காக நாடு முழுவதும் உள்ள பத்து கோடி குடும்பங்கள் பயன் பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத்திட்டத்தை  அறிமுகம் செய்திருக்கிறோம்.  வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மருத்துவ வசதிக்காக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வசதி பெறும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

     அருணாசலப் பிரதேச முதலமைச்சர் தெரிவித்தது போல டிஜிட்டல் தொடர்பு, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து, சாலை வசதி அனைத்தும் ஒரு சேர அமைந்தால் இந்த மாநிலம் மேலும் வலுவடையும்.

     ஊழலுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் மாநில முதலமைச்சர் காண்டு எனக்கு முழு ஆதரவு அளித்து வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். எதிலும் வெளிப்படைத்தன்மையும், நேர்மையும் இருக்க வேண்டும். வளங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை. நாட்டில் பணத்துக்கும் தட்டுப்பாடில்லை.  ஆனால் வாளியில் எவ்வளவுதான் நீங்கள் தண்ணீரை இட்டு நிரப்பினாலும், அதில் ஒரு துளை இருந்தால் தண்ணீர் எப்போதுதான் நிரம்பும்?  நமது நாட்டில் இந்த முறைதான் முன்னர் இருந்துவந்தது.

      முறைகேடுகளைத் தடுத்து பயனாளிகளுக்கு நேரடியாக மத்திய அரசின் அனைத்துப் பலன்களும் சென்றடையும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.