Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரசியல் அமைப்புச் சட்ட நாளன்று மாநிலங்களவை விவாதத்தின்போது பிரதமர், டாக்டர் அம்பேத்கரின் பின்பற்றத்தக்க பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.


இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என்பது சட்டத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்கு மட்டுமல்ல. நமக்கு எப்போது அறிவுரையோ அல்லது உத்வேகமோ வேண்டுமோ, அப்போதெல்லாம் அணுகக் கூடிய ஒரு சமூக ஆவணம் என்று கூறினார். அரசியல் அமைப்புச் சட்ட நாளை நினைவு கூறும் வகையிலும், அரசியல் அமைப்புச் சட்ட சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125வது பிறந்தநாளை முன்னிட்டும் நடந்த விவாதத்தில் பங்கெடுத்த பிரதமர் இவ்வாறு பேசினார்.

அரசியல் அமைப்புச் சட்டம் நாம் அனைவரும் இணைந்து முன்னேற ஒரு வாய்ப்பை அளிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், அரசியல் நிர்ணய சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் தருணம் இது என்று குறிப்பிட்டார். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பங்களிப்பை இந்நாடு புறக்கணிக்கவோ, மறக்கவோ முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஏக் பாரத், ஷ்ரேஷ்த் பாரத் குறித்து ஒற்றுமைக்கான ஓட்டத்தின் போது முதன் முதலில் குறிப்பிட்ட பிரதமர், அத்திட்டங்களுக்கான தனது யோசனைகளை தெரிவித்தார்.

அவரது உரையின்போது, பிரதமர், டாக்டர் அம்பேத்கர், திரு ஜவஹர்லால் நேரு மற்றும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணண் மற்றும் மேக்ஸ் முல்லர் ஆகியோரின் உரைகளை மேற்கோள் காட்டி, அவர்களின் நோக்கங்களின் பல்வேறு அம்சங்களை கோடிட்டுக் காட்டினார்.

***