Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஷா, பேறுகால செவிலிய உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் பிரதமர் செப்டம்பர் 11 அன்று உரையாடவுள்ளார்.


லட்சக்கணக்கான ஆஷா பணியாளர்கள், பேறுகால செவிலிய உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சுகாதார திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிபதிவு மூலம் உரையாடவுள்ளார். ஊட்டச்சத்து மாதத்தின் பகுதியாக இந்த உரையாடல் நாளை (செப்டம்பர் 11, 2018) காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

நாடு முழுவது செப்டம்பர் 2018, ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. முழுமையான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும்.

நவம்பர் 2017-ல் மத்திய அரசால் தொடங்கப்பட்ட தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் நோக்கத்திற்கு இது மேலும் வலுசேர்க்கும். குழந்தைகள் மத்தியில் வயதுக்கு ஏற்ற உயரம் வளராதது, ஊட்டச்சத்து குறைபாடு,  இரத்த சோகை மற்றும் குறைந்த எடையுடன் பிறத்தல் ஆகியவற்றை குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசு ஆண்டுதோறும் வயதுக்கு ஏற்ற உயரம் வளராததை 2 சதவீதமும் ஊட்டச்சத்து குறைப்பாட்டை 2 சதவீதமும் ரத்த சோகையை (சிறிய குழந்தைகள், பெண்கள் மற்றும் வளரிளம் பெண்கள் மத்தியில்) 3 சதவீதமும் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை 2 சதவீதமும் குறைத்து வர இலக்கு நிர்ணயித்துள்ளது.

     இதற்காக, பிரதமரின் இந்த உரையாடல் இந்த இயக்கத்திற்காக பங்களித்து வரும் அனைவரையும் ஒன்று சேர்க்கும்.  ஊட்டச்சத்து துறையில் உள்ள வெற்றி கதைகளை பரிமாறவும் களமாகவும் இது அமையும்.

*****