பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர், பூடான் ராஜ்யத்தின் முதன்மை ஆலோசகர், இந்திய குடியரசின் பிரதமர், மியான்மர் ஐக்கிய குடியரசின் அதிபர், நேபாள பிரதமர், இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அதிபர், தாய்லாந்து ராஜியத்தின் பிரதமர் ஆகிய நாங்கள் நான்காவது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் காத்மாண்டில் 2018, ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் சந்தித்தோம்.
1997-ம் ஆண்டு பாங்காக் பிரகடனத்தில் கண்டுள்ளபடி, பிம்ஸ்டெக்கின் கொள்கைகள், நோக்கங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியும்;
3-வது பிம்ஸ்டெக் பிரகடனம் (நேய் பை டா, 04 மார்ச் 2014 ) மற்றும் பிம்ஸ்டெக் தலைவர்கள் ஒதுங்கு ஓய்வு கூட்ட ஆவணம் (கோவா, 16 அக்டோபர், 2016) ஆகியவற்றை நினைவில் கொண்டும்;
வங்காள விரிகுடா மண்டலத்தை அமைதி, வளம், ஸ்திரத்தன்மை, கொண்டதாக நமது பொது வலு மற்றும் கூட்டு முயற்சி மூலம் உருவாக்க மனப்பூர்வமான உறுதியை மீண்டும் வலியுறுத்தியும்;
இந்த மண்டலத்தில் உள்ள புவியியல் தொடர்ச்சி நிலை, விரிவான இயற்கை மற்றும் மனிதவளங்கள், வளமான வரலாற்று இணைப்புகள், பண்பாட்டு பாரம்பரியம், ஆகியவற்றின் அடிப்படையில், உள்ள முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்புக்கான திறன் மீது நம்பிக்கைக் கொண்டும்;
நிலைத்த மேம்பாட்டு அலுவல் பட்டியல், 2030-ஐ அமல்படுத்துவதற்காக சேர்ந்து உழைப்பதில் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியும், மேம்பாட்டு நோக்கங்களை நிறைவேற்றுவதில் ஏழ்மையை அகற்றுவதுதான் பெரிய சவால் என்பதை உணர்ந்தும்;
பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் பொருளாதாரம், சமுதாயங்களில் ஒருவருக்கொருவர் இணைப்பு மற்றும் சார்ந்திருக்கும் நிலை உயர்ந்தால்தான் மண்டல ஒத்துழைப்புக்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டும்;
நமது மண்டலத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட வளம், பொருளாதார ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு இணைப்புக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பல பரிமாண இணைப்புகளின் அவசியத்தை வலியுறுத்தியும்;
மண்டலத்தில் பொருளாதார சமூக மேம்பாட்டை வளர்ப்பதில் வர்த்தகம், முதலீடு ஆகிய பெரும் பங்களிக்கும் காரணிகள் என்பதால் அவற்றின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும்;
மண்டலத்தில் உள்ள மிகக் குறைந்த அளவு வளர்ச்சியடைந்துள்ள அனைத்துப் பக்கங்களிலும் நிலத்தால் சூழப்பட்ட வளரும் நாடுகளின் சிறப்புத் தேவைகள், சூழ்நிலைகள், ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவற்றின் மேம்பாட்டின் நடைமுறைகளுக்கு ஆதரவு வழங்குவதன் அவசியத்தை உணர்ந்தும்;
பிம்ஸ்டெக் நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளின் அமைதி, பாதுகாப்புக்கு பயங்கரவாதமும், அமைப்புகளால் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களும் பெரிய அச்சுறுத்தல்களாக உள்ளன என்றும், இவற்றை எதிர்ப்பதில் தொடர்ந்த முயற்சிகள், ஒத்துழைப்பு, உறுப்பு நாடுகளின் தீவிர பங்கேற்புடன் கூடிய விரிவான அணுகுமுறை ஆகியவற்றின் அவசியத்தை உணர்ந்தும்;
அர்த்தமுள்ள ஒத்துழைப்பு, மற்றும் ஒருங்கிணைப்பு மூலம், அமைதியான, வளமான, ஸ்திரத்தன்மையுள்ள வங்காள விரிகுடா மண்டலத்தை உருவாக்க பிம்ஸ்டெக் அமைப்பை துடிப்பான, திறம்பட்ட, முடிவுகள் அடிப்படையிலான மண்டல அமைப்பாக மாற்றுவதில் உறுதிப்பாட்டை தெரிவித்தும்;
நியாயமான, நேர்மையான, சட்டத்தின் அடிப்படையிலான, சமமான, வெளிப்படையான, சர்வதேச அமைப்பு, ஐ.நா–வை மத்தியமாகக் கொண்ட பலதரப்பு தன்மையில் நம்பிக்கை, சட்ட அடிப்படையிலான சர்வதேச வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியும்;
பிம்ஸ்டெக்கின் கீழ் மண்டல ஒத்துழைப்பு நடைமுறையை சிறப்பாக வழிநடத்திச் செல்ல வலுவான நிறுவன ஏற்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும்;
பூடான் இடைக்கால அரசின் முதன்மை ஆலோசகர் பங்கேற்று உச்சிமாநாட்டு முடிவுகளுக்கும், வெளியாகும் ஆவணங்களுக்கும், அடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அனுமதி அளிப்பதற்கு உட்பட்டு சம்மதம் அளிக்கிறார் என்பதை கவனத்தில் கொண்டும்;
கீழ்க்கண்டவாறு அறிவிக்கிறோம்:
நிறுவனச் சீர்திருத்தம்
4-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டு பிரகடனத்தின் இணைப்பு
பகுதி சார்ந்த ஆய்வு
ஏழ்மை அகற்றுதல்
போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு (.இணைப்புத்திறன்)
வர்த்தகம் மற்றும் முதலீடு
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சர்வதேச குற்றங்கள்
சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை
பருவநிலை மாற்றம்
எரிசக்தி
தொழில்நுட்பம்
வேளாண்மை
மீன்வளம்
பொது சுகாதாரம்
மக்களிடையே தொடர்புகள்
பண்பாட்டு ஒத்துழைப்பு
சுற்றுலா
மலைப்பகுதி பொருளாதாரம்
நீலப்பொருளாதாரம்
——
PM @narendramodi with other leaders during the BIMSTEC retreat in Kathmandu. pic.twitter.com/3wDFqylp8Z
— PMO India (@PMOIndia) August 31, 2018
Wonderful discussions and exchange of ideas on strengthening BIMSTEC during the retreat of leaders in Kathmandu this morning. pic.twitter.com/tQpPVVfpTt
— Narendra Modi (@narendramodi) August 31, 2018