இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டை ரூ. 800 கோடியில் இருந்து ரூ. 1435 கோடியாக திருத்தியமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தியமைக்கப்பட்ட செலவு மதிப்பீடுகளில் கூடுதலாக உள்ள ரூ. 635 கோடியில் தொழில்நுட்ப செலவுகள் ரூ. 400 கோடி மற்றும் மனிதவள செலவுகள் ரூ. 235 கோடி அடங்கும்.
விவரங்கள்:
இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கிச் சேவைகள் 2018 செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து 650 அஞ்சலக கிளைகளிலும் 1.55 லட்சம் அலுவலக அஞ்சலகங்களிலும் 2018 டிசம்பர் முதல் கிடைக்கும்.
இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி சேவைகள்
இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி தனது தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மூலம் கட்டண/நிதி சேவைகள் அளிக்கும். இந்த சேவைகளை அஞ்சல் துறை பணியாளர்கள்/கடை நிலை முகவர்கள் அளித்து அவர்களை வெறும் தபால்களை அளிப்பவர் என்ற நிலையில் இருந்து நிதிச் சேவைகளை அளிப்பவர்களாக மாற்றும்.
இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வண்ட்க்கி கடை நிலை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை/கமிஷனை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி வாடிக்கையாளர்களிடையே இந்திய அஞ்சலக பணப்பட்டுவாடா வங்கியை பிரபலப்படுத்த அவர்களை ஊக்குவிக்கும்.
அஞ்சலக துறைக்கு கிடைக்கும் கமிஷனின் பகுதி அஞ்சலகங்களை அதிகரிக்க பயன்படுத்தப்படும்.