Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அருணாசலப் பிரதேசத்திற்கு பிரதமர் நாளை பயணம்


பிரதமர் திரு நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசத்திற்கு நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார். ஈட்டா நகரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தோர்ஜி காண்டு மாநில கூட்டரங்கத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த மையத்தில், கலைஅரங்கம், மாநாட்டு அரங்கம், கண்காட்சி அரங்கம் ஆகியவை உள்ளன. ஈட்டா நகரின் மிக முக்கிய குறிப்பிடத்தக்க இடமாக மாறும்.

மாநிலத்தின் சிவில் தலைமைச் செயலக கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் தோமோ ரிபா சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் கல்விப் பிரிவிற்கான அடிக்கல்லை நாட்டுவார்.

அருணாச்சலப்பிரதேசப் பயணத்தை முடித்தபின் பிரதமர் திரிபுராவுக்கு அலுவல் சாராப் பயணத்தை மேற்கொள்வார்.

***