Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குல்தீப் நய்யார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


 

பிரபல பத்திரிகையாளரும், மாநிலங்களவையில் முன்னாள் உறுப்பினருமான குல்தீப் நய்யார் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  “ குல்தீப் நய்யார் நமது காலத்தின் மகத்தான அறிவுஜீவியாக இருந்தவர். தமது கருத்துக்களில் வெளிப்படைத் தன்மையையும், அஞ்சாமையையும், கொண்டிருந்த அவரின் படைப்புகள் பல ஆண்டுகளாக எங்கும் பரவி இருந்தன. அவசர நிலைக்கு எதிரான அவரது உறுதியான நிலை, பொதுசேவை, சிறந்த இந்தியாவுக்கான உறுதி ஆகியவற்றிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு குறித்து துயரமடைந்தேன். எனது இரங்கல்கள் “ என்று பிரதமர் கூறியுள்ளார்.