Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


 

முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“அன்புக்குரிய அடல்ஜியின் மறைவுக்கு இந்தியா வருந்துகிறது. அவரது மறைவு ஓர் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. நாட்டுக்காக வாழ்ந்த அவர் பல்லாண்டு காலம் அயராது சேவை செய்தார். துக்ககரமான இந்த தருணத்தில் அவரை இழந்த அவரது குடும்பத்தினர், பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் கோடிக்கணக்கான அபிமானிகளுடன் என் எண்ணங்கள் இணைந்துள்ளன.       ஓம் சாந்தி.

அடல்ஜியின் சிறந்த தலைமைதான் 21ஆம் நூற்றாண்டில் வலுவான, வளமான, உள்ளடக்கிய இந்தியாவிற்கு அடித்தளமாக அமைந்தது. பல துறைகளில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடைபிடித்த அவரது கொள்கைகள் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்வையும்  தொட்டது.

அடல்ஜியின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரைப் பற்றிய எண்ணற்ற நினைவுகளை நான் கொண்டுள்ளேன். என்னைப் போன்ற தொண்டர்களுக்கு அவர் ஊக்க சக்தியாக இருந்தார். அவரது புத்தி கூர்மையையும், நகைச்சுவை உணர்வையும் நான் குறிப்பாக நினைவு கூர்கிறேன்.

அடல்ஜியின் விடா முயற்சியும், போராளியின் மனப்பாங்கும்தான் பா.ஜ.க.வை ஒவ்வொரு செங்கல்லாக நிர்மாணிக்கப்படுவதற்கு காரணமானது. பா.ஜ.க.வின் செய்தியை பரப்புவதற்கு மூலை முடுக்குகளுக்கெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  இதனால் தேசிய அரசியல் களத்திலும், பல்வேறு மாநிலங்களிலும், பா.ஜ.க.  வலிமையான சக்தியாக உருவானது என்று பிரதமர் தொடர்ச்சியான, டுவிட்டர் செய்திகளில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மாலை 05.05 மணிக்கு காலமானார் என்ற  தகவலை  புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் அறிவித்திருந்தது.