Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசியான் இந்திய மாநாட்டில் பிரதமரின் துவக்க உரை

ஆசியான் இந்திய மாநாட்டில் பிரதமரின் துவக்க உரை

ஆசியான் இந்திய மாநாட்டில் பிரதமரின் துவக்க உரை

ஆசியான் இந்திய மாநாட்டில் பிரதமரின் துவக்க உரை

ஆசியான் இந்திய மாநாட்டில் பிரதமரின் துவக்க உரை

ஆசியான் இந்திய மாநாட்டில் பிரதமரின் துவக்க உரை

ஆசியான் இந்திய மாநாட்டில் பிரதமரின் துவக்க உரை

ஆசியான் இந்திய மாநாட்டில் பிரதமரின் துவக்க உரை

ஆசியான் இந்திய மாநாட்டில் பிரதமரின் துவக்க உரை

ஆசியான் இந்திய மாநாட்டில் பிரதமரின் துவக்க உரை

ஆசியான் இந்திய மாநாட்டில் பிரதமரின் துவக்க உரை


மேதகு பிரதமர் டத்தோ திரு முகம்மது நஜீப் பின் துன் அப்துல் ரஜாக் அவர்களே,

மேதகு அதிபர்களே,

பிரதமர் அவர்களே, இந்த மாநாட்டை நடத்துவதற்காக உங்களுக்கு நன்றி. இம்மாநாட்டுக்காக செய்யப்பட்ட சிறப்பான ஏற்பாடுகளுக்காகவும், ஆசியான் மற்றும் மேற்காசிய மாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்றதற்காகவும், உங்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு இரட்டைத் துன்பத்திலிருந்து உருவான மலேசியா, தனது பொறுமையையும் உறுதியையும் காண்பித்திருக்கிறது.

கோலாலம்பூர் ஆசியாவின் வளர்ச்சியையும், இப்பிராந்தியத்தின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

ஒரு மைல்கல்லாக ஆசியான் சமூகம் பிறந்ததற்கு வாழ்த்துக்கள்.

எப்போதும் போலவே, ஆசியான், இதர நாடுகளுக்கு ஒரு உத்வேகத்தையும், பிராந்திய ஒத்துழைப்பையும், நல்லுறவையும் வழங்குகிறது. இந்தியாவின் பார்வையில், ஆசியானின் மதிப்பீடுகளும், தலைமையும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் ஒற்றுமைக்கு மையமாக விளங்கும்.

மேதகு அதிபர்களே, எனது இரண்டாவது ஆசியான் இந்தியா மாநாட்டுக்கு வருகை தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நை ப்யி தாவில் நடந்த கடந்த மாநாட்டில், நமது உறவின் பலத்தையும் நமது கூட்டுறவையும், அதை விட முக்கியமாக, இந்தியா ஆசியான் உறவின் மீது நீங்கள் வைத்த நம்பிக்கையையும் பார்த்தேன்.

நாம் தற்போது உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான சவால்கள், பொருளாதார நிலையின்மை, அரசியல் குழப்பங்கள் மற்றும் பாதுகாப்பு அச்றுறுத்தல்களிடையே சந்திக்கிறோம்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியாவும் ஆசியானும் இரு நம்பிக்கை ஒளிகள்.

இந்தியா இன்று மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம். எங்கள் வளர்ச்சி விகிதம் 7.5 சதவிகிதத்தை எட்டி, மேலும் வளர உள்ளது. எங்கள் பணவீக்கம் குறைந்ததோடு அல்லாமல், எங்களின் நிதி மற்றும் வெளிநாட்டு நிதிப் பற்றாக்குறையும் குறைந்து வருகிறது. எங்கள் தொழிலும், எங்கள் மீதான சர்வதேச நம்பிக்கையும் வளர்ந்து வருகிறது.

எங்களின் மாற்றம் வேகமாக இருப்பதால், பொருளாதார வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.

தற்போது, ஒரு வரவேற்கத் தகுந்த சூழலை ஏற்படுத்தியுள்ளோம். தொழில் செய்ய ஏதுவான நாடுகளுக்கான உலக வங்கியின் பட்டியலில், இந்தியா முன்னேறியுள்ளதே இதற்கு சான்று. பொருளாதார சீர்திருத்தங்களை விரைவாகவும், துணிவாகவும் மேற்கொள்வோம். ஆசியானின் பொருளாதாரம், புதிய வேகத்துடன் முன்னேறி வருகிறது. எங்களின் 1.9 பில்லியன் மக்களுக்கு வளத்தை அளிப்போம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

மேதகு அதிபர்களே,

எங்களின் தற்காலிக பின்னடைவை ஒதுக்கி விட்டால், எங்களின் வர்த்தகம் 76.5 மில்லியன் டாலர்களாக அதிகரித்து, இரு தரப்பிலும் முதலீடுகளும் அதிகரித்துள்ளது. இரு தரப்பு முதலீடுகளில் ஆசியான் முன்னணி பங்குதாரராக உள்ளது.

இந்த உறவின் மூலமாக இன்னும் ஏராளமாக செய்ய முடியும். நமது வர்த்தகம் மற்றும் முதலீடுகள் அதிகரித்து, நமது பொருளாதாரங்கள் வளரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

மேதகு அதிபர்களே,

நமது கூட்டுறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் நமக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வர்த்தக சேவை மற்றும் முதலீடுகளுக்கான ஒப்பந்தத்தில் நாம் ஜுலை 2015ல் நுழைந்தது பெரிய முன்னேற்றமாகும்.

சேவைகள் மற்றும் பொருட்கள் குறித்த, பிராந்திய பொருளாதார கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து ஆர்வமாக உள்ளோம்.

பகிர்ந்து கொள்ளும் முன்னேற்றத்துக்கு இணைப்பு ஒரு முக்கியமான விஷயமாகும். முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டம் நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. இது 2018ல் நிறைவேறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஆசியான் இடையே டிஜிட்டல் தொடர்பை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு 1 பில்லியன் டாலர் கடனாக வழங்க உத்தேசித்துள்ளோம்.

கடந்தகாலத்தில் உள்ளது போலவே, கம்போடியா, லாவோஸ், மியான்மார் மற்றும் வியட்நாமுடன் எங்களது உறவுக்கு சிறப்பு அழுத்தம் தர விரும்புகிறோம். அவர்களுடனான எங்களது திறன் அதிகரிக்கும் திட்டங்கள் வளரும். கூடுதலாக, மேற்கூறிய நாடுகளுடன் திட்ட வளர்ச்சி நிதியை உருவாக்கி உற்பத்தி மையங்களை நிறுவ உள்ளோம்.

மேதகு அதிபர்களே,

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், நமது கூட்டுறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் முக்கியத் தூணாக இருந்து வருகிறது. ஆசியன் இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி நிதியை தற்போது உள்ள 1 பில்லியன் டாலர்களில் இருந்து 5 மில்லியன் டாலர்களாக அதிகரிக்க உள்ளோம்.

குறைந்த செலவு கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்கவும், தொழிலநுட்ப மாற்றத்துக்காகவும், ஆராய்ச்சிக்காகவும், ஆசியான் இந்தியா புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையம் ஒன்றை உருவாக்க உள்ளோம்.

வியட்நாம் கூட்டுறவோடு அங்கே அமைய உள்ள எங்கள் விண்வெளித் திட்டம் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. அது விரைவில் முடிக்கப்படும் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஜி.பி.எஸ். உதவியுடன் செயல்படும், இடம் கண்டுபிடித்து தகவல் சொல்லும் மற்றும் வழிகாட்டும் கருவியான GAGAN அல்லது ஜியோ ஆகுமென்டட் சேவையை ஆசியானுக்கு வழங்கி இருக்கிறோம்.

கடல் வணிகம் அல்லது நீலப் பொருளாதாரம் என்று அழைக்கப்படும் பொருளாதாரத்தை நமது ஒத்துழைப்போடு வளர்த்தெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நமது பொருளாதார எதிர்காலத்திற்கும், உணவுப் பாதுகாப்பிற்கும், மருந்துகளுக்கும், சுத்தமான எரிசக்திக்கும் இது பெரும் வகையில் உதவும். பல்வேறு கடல் நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தமிட்டுள்ளது.

மேதகு அதிபர்களே, பெரும் நகரமயமாதல், பெரு நகரங்கள், எதிர்காலத்திற்கான திறன்கள், உணவுப் பாதுகாப்பு, நீர், சுகாதாரம் போன்ற சவால்களுக்கு, நமது ஆராய்ச்சிப் பணிகள் பயன்பட வேண்டும்.

தட்பவெட்ப மாற்றம் உலகமே கவலை கொள்ளும் ஒரு விஷயம். இந்தியா சிறந்த எரிசக்தி திட்டங்களை வைத்துள்ளது. 2022ம் ஆண்டுக்குள், 175 ஜிகாவாட் கூடுதல் எரிசக்தியை மறுசுழற்சி எரிசக்தியாக உற்பத்தி செய்ய உள்ளோம். படிமம் அல்லாத எரிசக்தியை 2030ம் ஆண்டுக்குள் 40 சதவிகிதம் அடைய உள்ளோம்.

மேதகு அதிபர்களே, மறுசுழற்சி எரிசக்தியில் எங்கள் கல்வி நிலையங்களில் 100க்கும் மேற்பட்ட பயிற்சி இடங்களை உங்களுக்கு தர தயாராக இருக்கிறோம்.

சூரிய ஒளி அதிகமுள்ள 122 நாடுகளின் சூரிய ஒளிக் கூட்டணியை வரும் நவம்பர் 30 அன்று பிரெஞ்சு அதிபர் ஹாலேண்டேவோடு சேர்ந்து அறிவிக்க உள்ளோம். அந்த கூட்டணியில் உங்கள் பங்கேற்பை எதிர்ப்பார்க்கிறேன்.

மேதகு அதிபர்களே,

நமது உறவின் கலாச்சார அம்சத்தை மீட்டெடுக்கும் கூட்டு முயற்சிகளை வரவேற்கிறேன். ஆசியான் இந்தியா கலாச்சார உறவுகள் குறித்த சர்வதேச மாநாடு ஜுலையில் டெல்லியில் நடைபெற்றது. ஆசியான் கல்வி நிலையம் ஒன்றை, எங்களின் கிழக்கு நுழைவாயிலான ஷில்லாங்கில், வட கிழக்கு மலைப் பகுதியில் திறக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்திய கவுன்சிலின் கலாச்சார உறவுகளுக்கான சிறந்த முன்னாள் மாணவர்களுக்கான விருதை, ஆசியானின் செயலர் மேதகு லியுயாங் மின் பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசியானின் 10 நாடுகளுக்கும், இந்தியா எலெக்ட்ரானிக் விசா வசதியை வழங்க உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேதகு அதிபர்களே,

நமது எதிர்காலம், பாதுபாப்பின் அடிப்படையிலும், கடல், விண்வெளி மற்றும் இணைய உலகில் நிலவும் ஸ்திரத்தன்மையிலும் அடங்கியுள்ளது.

இந்தியா ஜனவரி 2015ல் நடத்திய முதல் ஆசியான் இந்தியா இணைய பாதுகாப்பு மாநாடு, இத்துறையில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கு வழிகோல வேண்டும்.

1982ம் ஆண்டின் சர்வதேச கடல் ஒப்பந்தத்தின்படியும், இதர சர்வதேச ஒப்பந்தங்களின்படியும், விமானப் போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்தில் சுதந்திரத்தையும், தடையில்லா வணிகத்துக்கான சுதந்திரத்தையும், அளிப்பதில் இந்தியாவின் அர்ப்ணிப்பை ஆசியானுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

சர்ச்சைக்குள்ள தெற்கு சீன கடற்பகுதி தொடர்பாக, அனைத்து தரப்பினரும், தெற்கு சின கடற்பகுதி தொடர்பான பிரகடனத்தின்படியும், இது தொடர்பாக அனைத்து தரப்பு சம்மதத்தோடு கூடிய ஒரு ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

கடல் பாதுகாப்பு, கடற்கொள்ளையர் எதிர்ப்பு மற்றும் பேரழிவுகளில் மனிதாபிமான உதவி ஆகியவை தொடர்பாக நாம் ஒத்துழைப்புக்கான திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தீவிரவாதம் இன்று உலகளாவிய அளவில் பெரும் சவாலாக உருவாகியுள்ளது. இது தொடர்பாக ஆசியான் நாடுகளுக்குள் பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளது. நமது ஒத்துழைப்பை மேலும் வளர்க்கவும், சர்வதேச அளவில் இந்த ஒத்துழைப்பை பகிரவும் நாம் முயற்சி எடுக்க வேண்டும். சர்வதேச தீவிரவாதம் தொடர்பான முழுமையான மாநாட்டுக்கான பணிகளிலும் நாம் ஈடுபட வேண்டும்.

மேதகு அதிபர்களே, அதிக மாற்றத்துக்குள்ளாகி முன்னேறும் நமது பிராந்தியம், அமைதியான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதில், ஆசியான் தலைமையேற்று பிராந்தியத்துக்கான வடிவமைப்பை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இங்கே வருகை தந்திருக்கும் மேதகு அதிபர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொண்டு, இந்த உறவுக்கு இந்தியா தனது முழு ஆதரவை அளிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதை அங்கீகரிக்கும் விதமாக, ஆசியானுக்கான பிரத்யேகமான தூதரகத்தை ஜகார்த்தாவில் தொடங்கியுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் நமது கூட்டுறவை எவ்வாறு மேம்படுத்தப் போகிறோம் என்பது குறித்து உங்களின் கருத்துக்களைக் கேட்க ஆவலாக உள்ளேன்.

நன்றி.

*****