பிரான்சுடனான உறவுக்கு இந்தியா அளித்து வரும் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். கடந்த மாதம் பிரதமரின் பிரான்ஸ் நாட்டு விஜயம், இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தி புதிய உந்துசக்தியை அளித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
வரக்கூடிய COP 21 மாநாட்டில் ஒரு சாதகமான முடிவு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர், அம்மாநாடு UNFCC வரையறைகளுக்கு உட்பட்டு, சமத்துவமான, ஸ்திரத்தன்மை உள்ள, பரந்துபட்ட பொறுப்புகளை உள்ளடக்கிய பொதுவான முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தார். அம்மாநாடு வளர்ந்து வரும் நாடுகளுக்கும், சிறு தீவு நாடுகளுக்கும், தட்பவெட்ப மாற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு, தொழில்நுட்ப, நிதி சார்ந்த உதவிகளை செய்வதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பிரெஞ்சு அதிபரோடும் இதர தலைவர்களோடும் சேர்ந்து, சர்வதேச சூரிய ஒளி கூட்டமைப்பை COP 21 மாநாட்டில் அமைக்க பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா எடுத்து வரும் முன்னேற்பாடுகளை பாராட்டிய பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர் COP 21 மாநாட்டின் வெற்றியில் இந்தியா முக்கிய பங்கை வகிக்கும் என்று கூறினார்.
Met the Foreign Minister of France, Mr. @LaurentFabius. https://t.co/Bb1sAJePOq pic.twitter.com/DD8JS1ujGg
— Narendra Modi (@narendramodi) November 20, 2015